• Dec 25 2024

விஜய் டிவி டிஜே பிளக்கின் காதலி யார் தெரியுமா?- இதற்கு முதல் இத்தனை சீரியலில் நடித்திருக்கின்றாரா?

stella / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக பல ரியாலிட்ரி ஷோக்கள் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கின்றது. அந்த வகையில் ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் முக்கியமான டைம்ல கரெக்டான பாட்டு போட்டு அசத்துபவர் தான் டிஜே பிளக். இவரது காதலி என்று என்று கூறப்பட்ட ரோஜா குறித்து தான் தற்பொழுது பார்ப்போம் வாங்க.

அதாவது ரோஜா தற்பொழுது விஜய் டிவியில் ஔிபரப்பாகிக் கொண்டிருக்கும் ஊ சொல்லுறியா ஊ ஊ சொல்லுறியா என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இதில் தான் டிஜே பிளக்கின் காதலி என்றும் கூறப்பட்டார். இவரது முழுப் பெயர் ரோஜா ஸ்ரீ இவர் மீடியாவுக்குள் வரவேண்டும் என்பதற்காக சன்டிவியில் ஒளிபரப்பாகிய சன் சிங்கர் என்னும் பாடல் போட்டி நிகழ்ச்சியில் கலந்து கொண்டாராம்.


ஆனால் அதில் சந்தர்ப்பம் கிடைக்காததால் விஜய் டிவி நாஞ்சில் விஜயனுடன் இணைந்து அவருடைய வெப் சீரியலில் நடித்து வந்தாராம். இதனைத் தொடர்ந்து இன்னும் நிறைய வெப் சீரியல்களில் நடித்து வந்தாராம். குறிப்பாக கண்ணாள் என்னும் சீரியலில் மாடலாகவும் நடித்து அசத்தியிருந்தாராம்.

மேலும் இவர் கொரோனா காலத்தில் தான் அதிக போராட்டங்களை சந்தித்ததோடு மீடியாவுக்குள் எப்படியாவது நுழைய வேண்டும் என்ற ஆர்வத்தையும் வளர்ததுக் கொண்டாராம். இவருக்கு வாய்ப்புத் தருவதாக கூறி பலர் இவரை தவறாக எல்லாம் அழைத்தார்களாம். ஆனால் நல்ல முறையில் கிடைக்கும் வாய்ப்புக்களைத் தான் பயன்படுத்துவேன் என அப்படிக் கேட்டவர்களிடம் இருந்து விலகி விட்டாராம்.

தொடர்ந்து தனது விடாமுயற்சியால்  சில படங்களில் நடித்திருக்கின்றாராம். இவருடைய அம்மா சிறுவயதில் தவறியதால் அம்மா இல்லாத ஏக்கத்தோடு வாழ்ந்து வருகின்றாராம். அத்தோடு இவர் ஊ சொல்லுறியா ஊ ஊ சொல்லுறியா நிகழ்ச்சியில் கலந்து கொண்டது கூட டிஜே பிளக்கிற்காகத் தான் என்று கூறியிருந்தார். இவர் வந்த எப்பிஷோட் கூட வேற லெவலில் பிரபல்யமடைந்தது.


மேலும் விஜய் டிவியில் ஒரு நிகழ்ச்சியிலாவது வரமாட்டோமா என ஏங்கிக் கொண்டிருந்த இவருக்கு இது ஒரு நல்ல வாய்ப்பாக அமைந்ததாகவும் தற்பொழுது படவாய்ப்புக்கள் கிடைத்து வருவதாகவும் கூறியுள்ளார்.இதற்கெல்லாம் அவர் தான் காரணம் என பல இன்டர்வியூக்களிலும் கூறி வருகின்றாராம். அத்தோடு இவர்கள் இருவரும் உண்மையில் காதலர்களாக மாறுவார்களா என ரசிகர்கள் ஆவலாக உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement