• Jun 20 2025

"கூலி " பட ரகசியத்தை உடைக்கும் பெரிய ஹீரோக்கள்..! கடுப்பாகிய இயக்குநர்..

Mathumitha / 4 hours ago

Advertisement

Listen News!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி,சுருதிகாசன் ,நாகார்ஜுனா , அமீர்கான் போன்ற நடிகர்கள் நடித்துள்ளனர். 350 கோடி பட்ஜெட்டில் தயாராகும் இந்த படம் ஆகஸ்ட் 14 ஆம் தேதி வெளியாகவுள்ளது. கலாநிதி மாறன் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படம் பெரிய எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் தற்போது நாகார்ஜுனா மற்றும் அமீர்கான் "கூலி " படம் குறித்த ரகசியத்தை உடைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


அதாவது அமீர்கான் நடித்துள்ள சித்தரே ஜமீன் பேர் படத்தின் புரொமோஷனில் "கூலி " படம் குறித்து பேசி வருகின்றார். அதிலும் நான் இந்த காட்சிகளில் இப்படி வருகின்றேன் என சஸ்பென்ஸ் உடைத்து பேசியுள்ளார். அதுமட்டுமல்லாமல் நாகார்ஜுனா "குபேரா" பட புரொமோஷனில் இந்த படங்கள் குறித்து பேசி வருவதாக தெரிய வந்துள்ளது.


இதனால் இயக்குநர் சற்று மனவேதனையில் இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. மேலும் நாகார்ஜுனா படம் குறித்து பெரிய எதிர்பார்ப்பை வைத்திருப்பதாகவும் படத்தின் தெலுங்கு ரைட்ஸினை இவர் வேண்டி இருப்பதாக தெரியவந்துள்ளது.

Advertisement

Advertisement