• Aug 14 2025

60 கோடிகளை சுருட்டிய ஷில்பா மீது போலீஸ் புகார்! பேரதிர்ச்சியில் பாலிவுட் பிரபலங்கள்

Aathira / 5 hours ago

Advertisement

Listen News!

பாலிவுட் நடிகையான ஷில்பா ஷெட்டி பிரபல நடிகையாக திகழ்ந்து வருவதோடு இவரை இன்ஸ்டாகிராமில் மட்டும்  சுமார் 33.1 மில்லியன் பேர் பின் தொடர்ந்து வருகின்றனர்.

இந்த நிலையில், நடிகை ஷில்பா ஷெட்டி மற்றும் அவருடைய கணவர் ராஜ் குந்த்ரா மீது போலீஸ் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதில் அவர்கள் இருவரும் மும்பையைச் சேர்ந்த தொழிலதிபரிடம் ரூ.60 கோடி ரூபா பணமோசடி செய்ததாக மும்பை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். தற்போது இந்த தகவல் ஒட்டுமொத்த திரையுலகினரையும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளது.

அதாவது பெஸ்ட் பிரைவேட் லிமிடெட் என்ற ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனத்தின் இயக்குனர்களாக ஷில்பா ஷெட்டி மற்றும் அவருடைய கணவரும் காணப்படுகின்றனர். அந்த நிறுவனத்திற்கு தொழிலதிபர் தீபக் கோத்தாரி என்பவர் 2015 தொடக்கம் 2023 ஆம் ஆண்டு காலகட்டத்திற்குள் சுமார் ரூ. 60. 48 கோடி கொடுத்துள்ளார். ஆனால் அந்த பணங்களை அவர்கள் இருவரும்  தங்களுடைய சொந்த காரணங்களுக்காக பயன்படுத்தி உள்ளதாக கூறப்படுகிறது.


இதை தொடர்ந்து ராஜேஷ் ஆர்யா என்ற ஏஜென்ட் மூலம் 75 வீத கோடி கடனை 12 வீத வட்டியுடன் கட்டுவதற்கு அணுகியுள்ளனர். மேலும் அதிக வட்டியை தவிர்க்க இதனை 'முதலீடு' என்று மாற்றி பதிவு செய்ததாகவும் கோத்தாரி குற்றம் சாட்டியுள்ளார்.

அதன் பின்பு 2015 ஆம் ஆண்டு முதல் தவணையில் 31. 95 கோடியும், இரண்டாவது தடவையில் 28. 54 கோடிகளையும் கொடுத்துள்ளார். அதன் பின்பு அந்த நிறுவனத்தின் இயக்குனர் பதவியில் இருந்து ஷில்பா ஷெட்டி 2016 ஆம் ஆண்டு ராஜினாமா செய்துள்ளார். 


அதன் பின் அந்த நிறுவனத்திற்கு எதிராக திவால் வழக்கும் போடப்பட்டுள்ளது. ஆனால் இது தொடர்பில் எனக்கு தெரிவிக்கப்படவில்லை என்று கோத்தாரி குற்றம் சாட்டியுள்ளார்.

இதைத்தொடர்ந்து கோத்தாரி போலீஸ் புகார் அளித்துள்ள நிலையிலேயே நடிகை ஷில்பா ஷெட்டி மற்றும் அவருடைய கணவர் ராஜ் குந்த்ரா மீது மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது இந்த வழக்கு மும்பை போலீசாரின் பொருளாதார குற்றப்பிரிவால் விசாரிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

Advertisement

Advertisement