• Dec 26 2024

ரச்சிதா இனி தேவையில்லை. தினேஷுக்கு அப்பா, அம்மா கொடுத்த கிப்ட்..!

Sivalingam / 4 months ago

Advertisement

Listen News!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவரும் சீரியல் நடிகருமான தினேஷுக்கு அவருடைய அம்மா அப்பா கொடுத்த மறக்க முடியாத பரிசு குறித்த புகைப்படம் இன்ஸ்டாகிராமில் வைரல் ஆகி வருகிறது.

பிக் பாஸ் போட்டியாளர்களில் ஒருவரான தினேஷ், பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது, பிரிந்து இருக்கும் தனது மனைவியை ரச்சிதா தன்னை பார்க்க வருவார் என்று மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருந்தார். ஆனால் கடைசிவரை ரச்சிதா வரவில்லை என்பதும் இதனால் தினேஷ் ஏமாற்றம் அடைந்த நிலையில் இருவரும் என்றாவது ஒருநாள் சேர்வார்கள் என்ற நம்பிக்கையை இருதரப்பு விற்கும் இருந்து வருகிறது.

2015 ஆம் ஆண்டு ரச்சிதாவை தினேஷ் திருமணம் செய்த நிலையில் 2020 ஆம் ஆண்டு இருவரும் பிரிந்து விட்டார்கள். இதனை அடுத்து நான்கு வருடங்கள் ஆகிய நிலையில் இன்னும் இரு தரப்பு பெரியவர்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தான் கூறப்படுகிறது.

இந்த நிலையில் பிக் பாஸ் தினேஷுக்கு அவருடைய அம்மா அப்பா ஒரு சூப்பர் காரை பரிசளித்த நிலையில், அந்த கார் உடன் தினேஷ் மகிழ்ச்சியாக இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. இந்த புகைப்படத்திற்கு ’இனி ரச்சிதா தேவை இல்லை இந்த காருடன் நீங்கள் மகிழ்ச்சியாக வாழுங்கள்’ என்று கமெண்ட்கள் பதிவாகி வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த சில வாரங்களுக்கு முன்னர் தான் ரச்சிதா புதிய காரை வாங்கியதாக தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்த நிலையில் அதற்கு போட்டியாக தினேஷ் வாங்கி உள்ளாரா என்ற கேள்வியையும் ரசிகர்கள் எழுதி வருகின்றனர்.

Advertisement

Advertisement