• Dec 26 2024

ராயன்’ வசூல் தகவல் முழுவதும் பொய்யா? காத்து வாங்கும் தியேட்டர்கள்..!

Sivalingam / 4 months ago

Advertisement

Listen News!

தனுஷ் நடித்த ’ராயன்’ திரைப்படம் மூன்றே நாட்களில் 70 கோடிக்கு அதிகமாக வசூல் செய்ததாக கூறப்படும் நிலையில் நேற்றும் இன்றும் திரையரங்குகளில் காத்தாடி வருவதை பார்க்கும் போது மேலே சொல்லப்பட்ட வசூல் தகவல் முழுவதும் பொய்யா என நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பி வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தனுஷ் நடித்த இயக்கிய ’ராயன்’ என்ற திரைப்படம் கடந்த வெள்ளி என்று வெளியான நிலையில் இந்த படத்திற்கு பாசிட்டிவ் மற்றும் நெகட்டிவ் விமர்சனங்கள் சரிசமமாக வெளிவந்தன என்பதும் முதல் நாளில் இருந்து இந்த படம் முழுவதுமாக எந்த தியேட்டரிலும் ஹவுஸ்புல் ஆகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.



இருப்பினும் சமூக வலைதளங்களில் இந்த படம் இரண்டே நாட்களில் 50 கோடி ரூபாய் வசூல் செய்ததாகவும் மூன்றாவது நாளில் 75 கோடி வசூல் செய்ததாகவும் கூறப்பட்ட நிலையில் நேற்றும், இன்றும் திரையரங்குகளில் சுத்தமாக கூட்டமே இல்லை என்றும் ஒரு சில ஆடியன்ஸ்கள் மட்டுமே முன்பதிவு செய்திருப்பதாகவும் முன்பதிவு இணையதளத்தில் இருந்து தெரிய வருகிறது.

அப்படி என்றால் ஏற்கனவே வெளியான வசூல் தகவல்கள் முழுவதும் பொய்யா? என்ற கேள்வி எழுப்பி வரும் நிலையில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதிகாரபூர்வமாக வசூல் தகவலை வெளியிட்டால் மட்டுமே நம்ப முடியும் என்று கூறப்பட்டு வருகிறது.

Advertisement

Advertisement