• Dec 26 2024

’குத்தூசி கோவிந்தன்’ என்ற டைட்டில் வைத்திருக்கலாம்.. தனுஷை பங்கமாய் கலாய்த்த புளூசட்டை மாறன்..!

Sivalingam / 4 months ago

Advertisement

Listen News!

தனுஷ் நடித்த ’ராயன்’ திரைப்படம் நேற்று வெளியாகி பெரும்பாலான பாசிட்டிவ் விமர்சனங்களையும் ஒரு சில நெகட்டிவ் விமர்சனங்களையும் பெற்று வரும் நிலையில் வழக்கம் போல் பிரபலங்களின் படங்களுக்கு நெகட்டிவ் விமர்சனங்கள் தரும் ப்ளூ சட்டை மாறன் ’ராயன்’ படத்திற்கும் நெகட்டிவ் விமர்சனம் தந்ததோடு இயக்குனர் தனுஷை கலாய்த்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தனுஷ் நடித்த இயக்கிய ’ராயன்’ திரைப்படம் நேற்று வெளியான முதல் நாளிலேயே பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று வருகிறது. ஆனால் காசு வாங்கிக் கொண்டு விமர்சனம் செய்யும் நபர்கள் மட்டுமே இந்த படத்தை பாராட்டி வருகிறார்கள் என்றும் உண்மையில் இந்த படம் மிகவும் சுமாரான படம் தான் என்றும் நடுநிலை விமர்சகர்கள் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் ’ராயன்’ படத்திற்கு விமர்சனம் அளித்த புளூசட்டை மாறன் பங்கமாக கலாய்த்து இருக்கிறார். 14 வயது சிறுவனாக தனுஷ்க்கு இரண்டு தம்பிகள் ஒரு தங்கை என்று படம் ஆரம்பிக்கும் நிலையில் அவர்களுடைய அம்மா அப்பா என்ன ஆனார்கள் என்பது காட்டப்படவில்லை.

தங்கையை கடத்த ஒரு கும்பல் வர, ஹீரோ தனுஷ் ஒரு கொலையை செய்துவிட்டு தம்பிகள், தங்கையுடன் சென்னைக்கு தப்பித்து வந்து கஷ்டப்பட்டு அவர்களை ஆளாக்கும்  நேரத்தில் காவல்துறை அதிகாரி பிரகாஷ்ராஜ் ரௌடிகளை ஒழிக்க வேண்டும் என்று பிளான் போடும் போது தனுஷின் தம்பி அதில் சிக்கிக் கொள்கிறார். தம்பியை காப்பாற்றுவதற்காக தனுஷ் களத்தில் இறங்கும் போது அதன் பிறகு என்ன ஆச்சு என்பதுதான் இந்த படத்தின் கதை என்று புளூசட்டை மாறன் கூறியுள்ளார். மேலும்  இரண்டாம் பாதியில் படம் எதை நோக்கி நகர்கிறது என்பதே தெளிவாக இல்லை என்றும் இந்த படத்தில் எஸ்ஜே சூர்யா வில்லனா? சரவணன் வில்லனா? என்ற குழப்பம் இருக்கிறது என்றும் இரண்டாம் பாதி திரைக்கதை தறிகெட்டு ஓடுகிறது என்றும் தெரிவித்துள்ளார்.

இந்த படத்துக்கு ’ராயன்’ என்ற டைட்டில் வைத்திருப்பதற்கு பதிலாக கோவிந்தன் என்ற டைட்டில் வைத்திருக்கலாம் என்றும் சர்வ சாதாரணமாக வில்லனை பழி வாங்குகிறேன் என்று கையில் ஒரு குத்தூசியை வைத்துக்கொண்டு தனுஷ் கொலை செய்து வருவதால் ’குத்தூசி கோவிந்தன்’ என்று கூட டைட்டில் வைத்திருந்தால் பொருத்தமாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

இந்த படத்தின் மூலம் ரசிகர்களுக்கும் என்ன சொல்ல வருகிறீர்கள் என்று தனுஷிடம் கேள்வி கேட்டால் நிச்சயம் அவரிடம் பதில் இருக்காது என்றும் இது ஒரு மோசமான படம் என்றும் புளூசட்டை மாறன் விமர்சனம் செய்துள்ளார்.

Advertisement

Advertisement