தமிழ் தொலைக்காட்சி வரலாற்றில் அதிகளவான தொடர்கள் ஒளிபரப்பாகிக் கொண்டே இருக்கின்றன. அந்த வரிசையில், மக்களின் மனங்களில் நீங்காத இடம் பிடித்து, குடும்பங்களின் அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதியாகவே மாறிய சீரியல்கள் சிலவே. அவற்றில் ஒன்று தான் விஜய் தொலைக்காட்சியின் “பாக்கியலட்சுமி”.
தொடர்ச்சியான வெற்றியின் புனித சின்னமாக, தற்போது இந்த சீரியல் 1400 எபிசோட்களை கடந்துள்ளது. இந்த மாபெரும் சாதனையை கொண்டாடும் நிகழ்வு, மிகப்பெரிய குடும்ப விழாவாக மகிழ்ச்சியுடன் நிறைவடைந்தது. இந்த சிறப்புப் பதிவு விஜய் டிவியில் வரும் ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது.
2020-ஆம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகத் தொடங்கிய “பாக்கியலட்சுமி”, நகைச்சுவை, குடும்பம் மற்றும் உணர்வுகளால் நிரம்பிய மெகா தொடர். இதில், ஒரு பெண்ணின் வாழ்க்கை வெவ்வேறு பரிமாணங்களில் வெளிப்படுத்தப்பட்டிருந்தது. அத்தகைய தொடர் சமீபத்தில் நிறைவடைந்திருந்தது. தற்பொழுது அதில் நடித்த நடிகர்களை மீண்டும் பார்ப்பதற்கான சந்தர்ப்பம் கிடைத்துள்ளதை நினைத்து ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
Listen News!