• Aug 24 2025

ரஜினி வேணும்னு கெஞ்சினது மறந்துடுச்சா.? TVK தலைவருக்கு சாட்டையடி கேள்வி

Aathira / 1 day ago

Advertisement

Listen News!

தென்னிந்திய சினிமாவில்  250 கோடி சம்பளம் வாங்கும்  நடிகராக  வலம் வருகின்றார்  நடிகர் விஜய்.  இவருக்கென்றே கோடிக்கணக்கான ரசிகர்கள்  காணப்படுகின்றார்கள்.  அது மட்டும் இல்லாமல் கடந்த ஆண்டு தமிழக வெற்றிக்கழகம் என்ற கட்சியை ஆரம்பித்து அதன் இரண்டாவது மாநாடும் நேற்று முன் தினம் பிரம்மாண்டமாக நடைபெற்று முடிந்தது. 

தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சித் தலைவரான நடிகர் விஜய்  குறித்த மாநாட்டில்  ஸ்டாலின், சீமான்,ரஜினி  என ஏனைய கட்சித் தலைவர்களை நேரடியாகவே தாக்கி பேசி இருந்தார்.  இது  மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. இதனால் விஜய் தொடர்பில்  ஏராளமான  நெகட்டிவ் கமெண்ட்ஸ் குவிந்து வருகின்றன.

இந்த நிலையில், பிரபல யூட்யூபர் ஒருவர்  ரஜினி எவ்வளவு பெரிய லெஜெண்ட். அவர பார்த்து காப்பி அடிச்சு நடிச்சிட்டு இப்போ நான் ரஜினியை விட பெரிய ஆள் என்று மாநாட்டில் கத்தலாமா?ரஜினியை எதிர்க்கலாமா? எனக் கேள்வி எழுப்பியுள்ளார். 


மேலும் அவர் கூறுகையில் ,  ரஜினியை பார்த்து வளர்ந்தவங்க நீங்க.. அவரை பார்த்து தான் எல்லாமே கற்றுக் கொண்டீங்க.. அவர் போலவே பபுள்கம் சாப்பிடுவது, சிகரெட்  குடிப்பது,  வசனம் கூட அவரை காப்பி பண்ணி தான்  நடிச்சீங்க..  ஏன் நீங்க கூட  ஒரு படத்துல சொல்லி இருப்பீங்க எத்தனை  ரஜினி படம் பார்த்திருப்பன் என்று.. அப்படிப்பட்ட நீங்க ரஜினியை எதிர்க்கலாமா?


சின்ன வயசுல ரஜினி கூட படம் நடிச்சிருக்கீங்க..  விஜயகாந்தை  மட்டுமே  வைத்து படம் எடுத்து வந்த உங்க அப்பா கிட்ட  ரஜினியை வச்சு படம் எடுக்கணும் என்று  அடம் பிடித்து கெஞ்சி தானே அவர் கூட நான் சிகப்பு மனிதன் படத்தில் நடிச்சீங்க..   அந்த புகைப்படங்கள் கூட இன்னும் கூகுள்ல இருக்கு.. 

அரசியலுக்கு வந்த பிறகும் சினிமாவில் பேசுவது போல பேசினால் எப்படி ஒரு சிறந்த தலைவரா நீங்க உருவாவீங்க  என்று விஜய்யை தாறுமாறாக கிழித்துள்ளார். 

Advertisement

Advertisement