• Dec 27 2024

சேனலா? ப்ரொடக்ஷன் டீமா? குரேஷிக்கு வந்த குழப்பம்..! திடீரென அவர் எடுத்த முடிவு?

Aathira / 6 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு பெரிய ரசிகர் பட்டாளம் உள்ளது. இந்த ஷோவில் வாராவாரம் வித்தியாசமான டாஸ்க்குகளை வைத்து இந்த நிகழ்ச்சியை விறுவிறுப்பாக கொண்டு நடத்தி வருகின்றார்கள்.

குக் வித் கோமாளி சீசன் 5 கடந்த ஜனவரி மாதமே ஆரம்பித்திருக்க வேண்டும். ஆனால் மீடியா மேசன்ஸ் நிறுவனம் அதிலிருந்து விலகியது தான் இந்த தாமதத்திற்கு காரணம். அதற்குப் பின்னாலே வெங்கடேஷ் பட்டும் இந்த நிகழ்ச்சியிலிருந்து வெளியேறுவதாக அறிவித்தார்.

அதன் பின்பு வெங்கடேஷ் பட்டுக்கு பதிலாக புகழ்பெற்ற மாதம்பட்டி ரங்கராஜன் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அவர் தாமுவுக்கு ஜோடியாக இந்த ஷோவை நடத்தி வருகின்றார்.


இந்த நிலையில், தற்போது குக் வித் கோமாளி சீசன் ஐந்தில் கலந்து கொண்டுள்ள குரேஷி இதிலிருந்து விலகுவதாக தகவல்கள் வெளியாகி வைரலாகி உள்ளன.

இதற்கு பதிலளித்த குரேஷி கூறுகையில், குக் வித் கோமாளி சீசன் 5 ஆரம்பிப்பதற்கு முன்பே எனக்கு டாப் குக்கு டூப் குக்கு நிகழ்ச்சி ஆரம்பது பற்றி தெரியும். என்னையும் மீடியா மேசன்ஸ் நிறுவனம் கூப்பிட்டனர். ஆனால் எனக்கு அந்த நேரத்தில் நிறுவனத்தின் ப்ரொடக்ஷன் பக்கம் போறதா அல்லது விஜய் டிவி சேனல் பக்கம் போறதா என்ற குழப்பமாக இருந்தது.

ஆனா இறுதியில் நான் சேனல் பக்கம் இருக்கலாம் என முடிவெடுத்தேன். இதனால் ப்ரொடக்ஷன் டீம் பக்கம் போகவே இல்லை. இன்னைக்கு நான் ப்ரொடக்ஷன் டீம் பக்கம் போயிருந்தால் நானும் வெங்கடேஷ் பட்டுடன் டாப் குக்கு டூப் குக்கு நிகழ்ச்சியில்  ஒருவராக இருந்திருப்பேன் என்று கூறியுள்ளார் குரேஷி.

Advertisement

Advertisement