• Jul 26 2025

‘தலைவன் தலைவி’ வெற்றிக் கொண்டாட்டத்துடன் அடுத்த பட அப்டேட்டைப் பகிர்ந்த விஜய் சேதுபதி.!

subiththira / 20 hours ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் சிறப்பான நடிப்புத் தேர்ச்சியால் ரசிகர்கள் மனதில் ஆழமாக பதிந்தவர் விஜய் சேதுபதி. இன்றைய தினம் (ஜூலை 25, 2025) திரையரங்குகளில் வெளியாகியுள்ள அவரது புதிய படம் ‘தலைவன் தலைவி’, ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.


பாண்டிராஜ் இயக்கியுள்ள ‘தலைவன் தலைவி’ படத்தில் விஜய் சேதுபதி மற்றும் நித்யா மேனன் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். 

இப்படம் வெளியாகி சில மணி நேரங்களுக்குள் சமூக வலைத்தளங்களில் "Feel-Good Family Entertainer" என்ற பெயரில் கமெண்ட்ஸ் பரவ ஆரம்பித்துள்ளது. இதைத் தொடர்ந்து, படக்குழுவினர் வெளியீட்டின் மகிழ்ச்சியை கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர்.


அதே நேரத்தில், விஜய் சேதுபதி தனது அடுத்த படமாக பூரி ஜெகன்நாத் இயக்கும் ஒரு பாக்ஸ் ஆபிஸ் மாஸ் படத்தில் நடிக்க உள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது இரட்டை சந்தோஷம் என ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்து வருகின்றனர்.

Advertisement

Advertisement