தெலுங்கு திரையுலகில் துளிர்த்த நடிகை ஸ்ரீலீலா, தற்போது தமிழ் சினிமாவிலும் தன்னுடைய தனி அடையாளத்தை உருவாக்கி வருகிறார். இளம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள இவர், தற்போது சிவகார்த்திகேயன் ஜோடியாக பராசக்தி படத்தில் நடித்து வருகிறார்.
தமிழ், தெலுங்கு படங்களில் தொடர்ச்சியாக வாய்ப்புகள் குவிந்து வரும் நிலையில், ஸ்ரீலீலா தற்போது ஹிந்தி சினிமாவிலும் அறிமுகமாக உள்ளார். மேலும் ஹிந்தி ரசிகர்களிடமும் அவருக்கு நல்ல வரவேற்பை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சினிமா மட்டுமல்லாமல் சமூக வலைத்தளங்களிலும் தனது இடத்தை உறுதி செய்து வருகிறார் ஸ்ரீலீலா. இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக உள்ள அவர், சமீபத்தில் தனது லேட்டஸ்ட் போட்டோஸ்களை பதிவிட்டுள்ளார். அழகான கறுப்பு உடையில் இருந்த அந்த புகைப்படங்கள் வைரலாகி, ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. மேலும் அவர் பதிவிட்ட பதிவும் வைரலாகி வருகிறது "மழை பெய்கிறது… ஸ்ரீலீலாவை ஒரு நடைக்கு அழைத்துச் செல்ல வேண்டிய நேரம் இது". என்ற பதிவும் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகின்றது. பிரபலங்களும், ரசிகர்களும் அவரை “Fashion Queen” என பாராட்டி வருகின்றனர்.
Listen News!