• Jul 26 2025

பாக்ஸ் ஆபிஸை அதிரவைத்த "ஹரி ஹர வீரமல்லு"..! முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா.?

subiththira / 23 hours ago

Advertisement

Listen News!

தெலுங்கு சினிமாவில் பவர் ஸ்டார் என அழைக்கப்படும் பவன் கல்யாண், பல வருடங்களாக ரசிகர்களிடையே சிறப்பான தாக்கத்தை ஏற்படுத்தியவர். தற்போது இவர் நடித்துள்ள பிரம்மாண்டமான ஆக்‌ஷன் திரைப்படம் 'ஹரி ஹர வீரமல்லு, நேற்று உலகம் முழுவதும் வெளியாகி பெரும் கவனத்தை ஈர்த்தது.


இப்படத்தை க்ரிஷ் ஜலகரமுடி மற்றும் ஜோதி கிருஷ்ணா போன்றோர் இயக்கினர். இதுவே இந்த படத்தின் சிறப்பாக பார்க்கப்படுகிறது. காரணம், இரு பிரபல இயக்குநர்களின் கலைச்சேர்க்கையால் உருவாகியுள்ள திரைப்படமாகும். 


இப்படத்தில் பவன் கல்யாணுடன் இணைந்து நிதி அகர்‌வால், அர்ஜுன் ராம்பால் போன்றவர்களும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இப்படம் வெளியான முதல் நாளே உலகளவில் ரூ. 75 கோடி வசூல் செய்துள்ளது. இது பவன் கல்யாணின் மார்க்கெட் இன்னும் குறையவில்லை என்பதை உறுதி செய்திருக்கிறது.

Advertisement

Advertisement