• Oct 26 2024

கிடைத்த வாய்ப்பை மிஸ் செய்த அஸ்வின்.. மறுபடியும் முதலில் இருந்தா?

Sivalingam / 2 months ago

Advertisement

Listen News!

குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமாகி அதன் பிறகு சில திரைப்படங்களில் நடித்த நடிகர் அஸ்வின் தற்போது வாய்ப்பு கிடைக்கவில்லை என்பதால் மறுபடியும் ஒரு ரியாலிட்டி ஷோவில் கலந்து கொள்ள இருப்பதாகவும் அனேகமாக அவர் பிக் பாஸ் அடுத்த சீசனில் கலந்து கொள்ள வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

’குக் வித் கோமாளி’ சீசன் 2 நிகழ்ச்சியில்  கலந்து கொண்ட அஸ்வினுக்கு ஏராளமான பெண் ரசிகர்களுக்கு கிடைத்தார்கள் என்பதும் குறிப்பாக ஷிவாங்கி உடன் அவரது கெமிஸ்ட்ரி சூப்பராக இருந்தது என்று பல கமெண்ட்கள் வெளியானது என்பது தெரிந்தது.

குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானதை அடுத்து ஒரு பெரிய தயாரிப்பாளர் அவரை வைத்து மூன்று படங்கள் தயாரிக்க ஒப்பந்தம் செய்தார். ஆனால் முதல் படத்திலேயே அவரது பேச்சு சரியில்லை என்பதால் மற்ற இரண்டு படங்களை ட்ராப் செய்துவிட்டு ஒரு படத்தை மட்டும் தயாரித்தார் என்பதும் அந்த படமும் சரியாக ஓடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதனை அடுத்த ஒரு சில படங்களில் நடித்தாலும் அஸ்வினுக்கு சரியான வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்பதை அடுத்து மீண்டும் விஜய் டிவியில் ரியாலிட்டி ஷோவில் கலந்து கொள்ள அவர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

குறிப்பாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக அவர் முயற்சித்து வருகிறார் என்றும் அவருக்கு இந்த நிகழ்ச்சியில் வாய்ப்பு கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது. பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மீண்டும் புகழ் பெற்று அதன் பிறகு சினிமா வாய்ப்பை தேடலாம் என்று அவர் திட்டமிடப்பட்டு இருப்பதாக கூறப்படுவதால் மறுபடியும் முதலில் இருந்தா? என்று கமெண்ட்கள் பதிவாகி வருகிறது.

Advertisement