• Apr 21 2026

ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான்.! முடிவுக்கு வரும் தணிக்கை சிக்கல்... ஜனநாயகன் ரிலீஸ் தேதி

shali / 1 hour ago

Advertisement

Listen News!

விஜய் ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த ஜனநாயகன் திரைப்படம் தொடர்ந்து பல தடைகளை சந்தித்து வந்தது குறிப்பிடத்தக்கது. ஆரம்பத்தில் கடந்த ஜனவரி 9ஆம் தேதி இப்படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், படத்திற்கு தணிக்கை சான்றிதழ் கிடைக்காத காரணத்தால் வெளியீடு தள்ளிப் போனது.


பின்னர் இந்த விவகாரம் உச்ச நீதிமன்றம் வரை சென்றது. வழக்கு மாறி மாறி விசாரணைக்கு வந்தாலும், ஒரு மாத காலம் கடந்தும் எந்தத் தீர்வும் எட்டப்படவில்லை. இப்படத்தில் தேர்தல் தொடர்பான சில முக்கிய காட்சிகள் இடம்பெற்றிருப்பதால், அதை தேர்தல் ஆணையம் பரிசீலிக்க வேண்டும் என தணிக்கை வாரியம் தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகின.

இதற்கிடையில், தயாரிப்பாளருக்கு பெரிய அதிர்ச்சியாக, முழு திரைப்படமும் இணையத்தில் கசிந்தது. இந்த சம்பவம் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. போலீசார் மேற்கொண்ட விசாரணையில், படத்தின் வீடியோ எடிட்டரே இதற்கு காரணம் என தெரியவந்தது. சம்பந்தப்பட்ட நபர் கைது செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த சம்பவம் திரைப்பட பாதுகாப்பு குறித்து மீண்டும் கேள்விகளை எழுப்பியுள்ளது.

இந்நிலையில், தேர்தல் முடிந்த பிறகு வருகிற ஏப்ரல் 24ஆம் தேதி இப்படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்க தணிக்கை வாரியம் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனால், படம் விரைவில் வெளியாவது உறுதி என ரசிகர்கள் நம்பிக்கை கொண்டுள்ளனர். அனைத்தும் சாதாரணமாக நடந்தால், ஏப்ரல் 30ஆம் தேதி விஜய் நடித்த இந்த படம் திரையரங்குகளில் வெளியாகும் வாய்ப்பு அதிகம் என எதிர்பார்க்கப்படுகிறது.


Advertisement

Advertisement