• Dec 25 2024

R15 விலையுயர்ந்த பைக்கை ஓட்டிச்சென்ற தனுஷ் மகன்! லைசென்ஸ் இல்லாமல் ரூல்ஸ் மீறலென குற்றச்சாட்டு

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

நடிகர் தனுஷின் மூத்த மகன் யாத்ரா விலையுயர்ந்த R15 பைக்கில் வலம் வரும் காட்சிகள் இணையத்தில் வைரலாகியுள்ளது. இதற்கு காரணம் அவருக்கு லைசென்ஸ் கூட இல்லையாம் என்று..

சூப்பர் ஸ்டார் ரஜினியின் மருமகனான தனுஷ் அண்மையில் தான் தனது மனைவியை பிரிந்து சென்றார். எனினும் அவர்களது வீட்டிற்கு பக்கத்திலையே சுமார் 150 கோடி செலவில் வீடொன்றை கட்டி அங்கு குடியமர்ந்தார். இதற்கு முக்கிய காரணம் அவரது பிள்ளைகள் அடிக்கடி பார்க்கத் தான். 


இவ்வாறான நிலையில், தனது தாத்தா வீட்டில் இருந்து தனது அப்பாவின் வீட்டிற்கு பைக்கில் சென்றுள்ளார் தனுஷின் மூத்த மகன்.

எனினும், அவருக்கு லைசென்ஸ் கூட இல்லை என பேசப்பட்டாலும் அவரின் பாதுகாப்பு கருதி அவருடன் பாதுகாப்பு காவலர் ஒருவர் இன்னோரு பைக்கில் சென்றுள்ளார். தெருவிலும்  பாதுகாப்பு கருதி  ஆட்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர்.அத்துடன், அவருக்கு இன்னும் 18 வயது பூர்த்தியாகத நிலையில் அவர் பைக் ஓட்டி பழகி பார்த்ததாக கூறப்பட்டுள்ளது.


இதேவேளை, அவர் வீதியில் போகும் வாகனங்களுக்கு இடைஞ்சல் விளைவித்தாகவும் குற்றம் சாட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.




Advertisement

Advertisement