திரில்லர் கதைக்களத்தில் கடந்த மாதம் ஜூன் 27ம் தேதி வெளியான விஜய் ஆண்டனி நடிப்பில் உருவான மார்கன் திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அறிமுக இயக்குநர் லியோ ஜான் பால் இயக்கிய இந்த படத்தில் அஜய், சமுத்திரக்கனி, தீப்ஷிகா, ப்ரகிடா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
வெளிவந்த முதல் நாள் முதல் விமர்சன ரீதியாகவும் பாக்ஸ் ஆபிஸிலும் நல்ல வரவேற்பை பெற்றது. கிரைம் திரில்லர் படங்களுக்கென்றே தமிழ் ரசிகர்களிடம் எப்போதும் ஒரு தனி எதிர்பார்ப்பு இருந்துவருகிறது.
இந்த நிலையில் முதல் நாளிலிருந்தே எதிர்பார்க்கப்பட்டதை விட நல்ல வசூலை பெற்ற படம் தற்போது பாக்ஸ் ஆபிஸில் 10 நாட்களை வெற்றிகரமாக கடந்துள்ளது. தற்போது வெளியாகியுள்ள தகவலின்படி மார்கன் உலகளவில் இதுவரை ரூ. 7.2 கோடி வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இன்னும் சில நாட்களில் வசூல் மேலும் உயர வாய்ப்பு உள்ளதாக தொழில்நுட்ப வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
Listen News!