• Aug 30 2025

தமிழ் சீரியல் உலகில் மறையாத பெயர்... இயக்குநர் SN சக்திவேல் காலமானார்!

subiththira / 11 hours ago

Advertisement

Listen News!

தமிழ் சின்னத்திரை உலகில் பல முக்கியமான சீரியல்களின் பின்னணியில் கலைதிறனுடன் இருந்த இயக்குநர் SN சக்திவேல், உடல்நலக்குறைவால் இன்று காலமானார்.


இன்றைய டிவி ரசிகர்கள் பாசமாக நினைக்கும் ‘சின்ன பாப்பா பெரிய பாப்பா’ ,  ‘பட்ஜெட் குடும்பம்’ போன்ற சீரியல்கள் மற்றும் " இவனுக்கு தண்ணில கண்டம்" என்ற படத்தையும் இயக்கி அதிகளவான மக்களின் மனதை வென்றிருந்தார் SN சக்திவேல். 


அத்தகைய இயக்குநரின் சோகச் செய்தி இன்று காலை வெளியானதிலிருந்து, சின்னத்திரை மற்றும் திரைப்படத் துறையில் இருந்து பலரும் தங்களது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.

Advertisement

Advertisement