லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த், நாகார்ஜுனா ,அமீர்கான் ,சத்யராஜ், சுருதிகாசன் என பலர் நடித்துள்ள திரைப்படம் "கூலி " இந்த படம் ஆகஸ்ட் 14 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்த படத்திற்கு இசையமைப்பாளராக அனிருத் பணியாற்றி வருகின்றார். அண்மையில் இவரது இசையில் வெளியாகிய முதலாவது பாடல் பட்டி தொட்டி எங்கும் வைரலாகியது.
இந்த நிலையில் அநேகமான ரஜினியின் படங்களிற்கு அனிருத் மிகவும் அழகாக இசையமைப்பார். தற்போது படம் ஆகஸ்ட் மாதம் வெளியாகும் என்பதால் இறுதிவரை வேலைகளை முடிக்காமல் நேரத்துக்கு முடித்து தருமாறு இயக்குநர் அனிருத்திற்கு நெருக்கடி கொடுத்துள்ளார்.
இதுமட்டுமல்லாமல் அனிருத் விஜய்தேவர்கொண்டாவின் படத்திற்கும் இசையமைத்து வருகின்றார். இந்த படமும் ஆகஸ்ட் மாதம் வெளியாக இருப்பதால் இரண்டு பக்கத்தில் இருந்தும் இவருக்கு நெருக்கடி கொடுத்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
Listen News!