• Aug 30 2025

தனுஷின் "இட்லி கடை" படத்தில் இரு நாயகிகள்...! யார் அந்த நாயகிகள்? வெளியான தகவல் இதோ..!

Roshika / 7 hours ago

Advertisement

Listen News!

தனுஷ் இயக்கி நடித்துள்ள புதிய திரைப்படம் ‘இட்லி கடை’ தற்போது திரையுலகில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக ஷாலினி பாண்டே முதன்முறையாக தமிழில் நாயகியாக அறிமுகமாகியுள்ளார். இதற்கிடையே மற்றொரு பிரபல நடிகையான நித்யா மேனனும் இப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.


இது வரை வந்த தகவலின்படி, 'இட்லி கடை' திரைப்படத்தில் இரு வெவ்வேறு love tracks இடம்பெற்றுள்ளன. கிராமப்புற பின்னணியில் நடக்கும் காட்சிகளில் நித்யா மேனன் ஜோடியாக வருகிறார். மாறாக, நகராட்சிப் பிண்ணனியில் நடைபெறும் காட்சிகளில் ஷாலினி பாண்டே தனது நடிப்பால் கலக்கும் வகையில் தோன்றுகிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு பல்வேறு வெளிநாட்டு லொகேஷன்களில் நடைபெற்றுள்ளது. முக்கியமாக, தாய்லாந்தில் சில அதிரடியான காட்சிகள் எடுக்கப்பட்டு, பின்னர் அவை துபாய் என மாற்றப்பட்டுள்ளன. இது கதையின் கோணத்தின்படி மாற்றம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.


இது தனுஷ் இயக்கும் இரண்டாவது படம் என்பதால், ரசிகர்கள் மத்தியில் இதற்கு அதிக எதிர்பார்ப்பு நிலவுகிறது. விறுவிறுப்பான திரைக்கதையுடன், இரு பிரபல நடிகைகளின் கலப்பு – இது  இட்லிகடை நிச்சயம் சுவையாக மாற்றும் எனக் கூறப்படுகிறது.

Advertisement

Advertisement