• Aug 30 2025

வெற்றிமாறனின் அடுத்த படம் 15நாட்களில் அறிவிப்பு...!வடசென்னை 2 குறித்து புது அப்டேட்...!

Roshika / 7 hours ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் தனித்துவமான இயக்குநர்களில் ஒருவரான வெற்றிமாறன், தனது அடுத்த பட திட்டம் குறித்து மிக விரைவில் அதிகாரபூர்வ அறிவிப்பு கொடுக்கவிருக்கிறார். அவரது சமீபத்திய பேட்டியில், “எனது அடுத்த படம் பற்றிய அறிவிப்பை 15 நாட்களுக்குள் வெளியிடுவோம். அந்த படம் முடிந்ததும், நீண்ட காலமாகக் காத்திருக்கப்படும் ‘வடசென்னை 2’ படப்பிடிப்பை தொடங்குவோம்,” என உறுதியாக தெரிவித்துள்ளார்.


‘வடசென்னை’ (2018) படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. அந்தப் படத்தில் தனுஷ் நடித்த அன்பு என்ற கதாப்பாத்திரம், தமிழ் சினிமா ரசிகர்களின் மனதில் நீங்காத இடத்தைப் பிடித்தது. தொடர்ச்சியாக வரவிருக்கும் ‘வடசென்னை 2’ மீது எதிர்பார்ப்பு மிக அதிகமாகவே உள்ளது.


வெற்றிமாறனும் தனுஷும் மீண்டும் இணையும் இந்தத் தொடரின் இரண்டாம் பாகம் குறித்த விபரங்களை அவர் விரைவில் பகிரவிருக்கிறார். “வடசென்னை 2 ஒரு பெரிய திட்டம். எனவே, அதை முழுமையாகத் திட்டமிட்டு செய்யவேண்டும்,” என்றும் அவர் கூறியுள்ளார்.

இந்நிலையில், ரசிகர்கள் வெற்றிமாறனின் அடுத்த படத்தின் அறிவிப்பிற்கும், அதன்பின் ‘வடசென்னை 2’ குறித்து மேலும் விபரங்களுக்கும் உற்சாகமாகக் காத்திருக்கின்றனர்.

Advertisement

Advertisement