• Dec 25 2024

சீரியல் நடிகை மகாலக்ஷ்மியின் முதலாவது திருமண முறிவுக்கு என்ன காரணம் தெரியுமா?- இதுவரை அறியாத விடயங்கள்

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சின்னத்திரையில் சமீபகாலமாக ட்ரெண்டிங்கில் இருக்கும் சர்ச்சை நாயகி தான் வி.ஜே மகாலக்ஷ்மி.இவர் சீரியலில் மட்டுமல்லாது ரியல் லைப்லையும் நிறைய சர்ச்சையில் சிக்கியிருக்கின்றார்.அத்தோடு அண்மையில் தயாரிப்பாளர் ரவீந்திரனைக் காதலித்து திருமணம் செய்த கொண்டார்.

அந்த வகையில் இவர் குறித்து தான் இப்போது வாங்க பார்க்கலாம். கடந்த 1990ம் ஆண்டு மார்ச் மாதம் 21ம் திகதி பிறந்தார். மாடலிங் துறையிலும் நடிப்பிலும் ஆர்வம் உடையவராகவும் இருக்கின்றார்.இவர் தொகுப்பாளினியாக இருந்து தான் பின்னர் நடிகையானார்.


சினிமாவில் இருந்த ஆர்வத்தினால் தான் தெகுப்பாளினி பணிக்கே வந்தாராம். நிகழ்ச்சி சிறப்பாக தொகுத்து வழங்கியதை அடுத்து தான் நடிக்கவே வாய்ப்புக்கிடைத்ததாம்.குறிப்பாக இவர் சன்டிவியில் நிகழ்ச்சித் தொகுப்பாளராக இருந்ததால் தான் சன்டிவி சீரியல்களில் நடிக்கும் வாய்ப்புக் கிடைத்ததாம்.


அதன்படி செல்லமே அவாணி ராணி அரசி போன்ற பல சீரியல்களில் நடித்தாராம். தற்பொழுது அன்பே வா சீரியலில் நடித்த வருகின்றாராம்.சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும் போது பெற்றோரை எதிர்த்து அனில் என்பவரைத் திருமணம் செய்து கொண்டாராம்.


திருமணத்தைத் தொடர்ந்து பல சீரியல்களில் நடித்து வந்த இவருக்கு சச்சின் என்ற ஒரு ஆண் குழந்தையும் உள்ளது.இதனை அடுத்து பல சர்சைகளில் சிக்கியதால் நெக்கட்டிவ் ரோலில் நடிக்க ஆரம்பித்தாராம். தொடர்ந்து ஈஸ்வரன் என்னும் சீரியல் நடிகருடன் இருந்த நெருக்கம் காரணமாக அவரது மனைவி ஜெயஸ்ரீ பல புகார்களையும் குற்றச் சாட்டுக்களையும் வைத்திருந்தாராம்.


இதனால் இவரது கணவர் அனில் இவரை விவாகரத்து செய்த விட்டாராம். இதனை அடுத்து சீரியலில் நடித்து வந்த பின்னர் தான் ரவீந்தரைக் காதலித்து திருமணம் செய்த கொண்டார்.திருமணத்திற்குப் பிறகும் இருவரும் கெரியரில் அதிக கவனம் செலுத்தி வருவதோடு சந்தோசமாக இருந்து வருகின்றார்களாம் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement