• Dec 26 2024

டிக்கெட் டூ பினாலே வாரத்தில் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறப்போகும் போட்டியாளர் யார் தெரியுமா?- இதை தானே எதிர்பார்த்தோம்

stella / 11 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கும் ரியாலிட்ரி ஷோ தான் பிக்பாஸ் சீசன் 7. இந்த நிகழ்ச்சியானது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதால் இதில் யார் டைட்டில் வின்னர் ஆவார் என்ற எதிர்பார்ப்பானது ரசிகர்களிடம் அதிகமாக உள்ளது.அத்தோடு தற்பொழுது டிக்கெட் டூ பினாலே டாஸ்க் நடைபெற்று வருகின்றது.

இதில் இந்த நிலையில், டிக்கெட் டூ பினாலே வெற்றியாளரை தீர்மானிக்கும் டாஸ்க் இன்று நடத்தப்பட்டது. அதில் வீட்டின் கார்டன் ஏரியாவில் வைக்கப்பட்டுள்ள போர்டில் டிக்கெட் டூ பினாலே என்கிற பதாகையை போட்டியாளர்கள் கீழே விழாமல் ஒற்றைக்கையால் பிடித்துக்கொள்ள வேண்டும்.


 யார் அதிக நேரம் கையை எடுக்காமல் பதாகையை பிடித்திருக்கிறார்களோ அவரே இந்த டாஸ்க்கில் வெற்றியாளராக அறிவிக்கப்படுவார். இதையடுத்து நீண்ட நேரம் தாக்குப்பிடித்து இந்த போட்டியில் ரவீனா வெற்றிபெற்று உள்ளார். அவருக்கு ஐந்துபுள்ளிகள் கிடைத்தாலும் அவருக்கு டிக்கெட் டூ பினாலே டிக்கெட் கிடைக்கவில்லை. 

ஒவ்வொரு வாரமும் எலிமினேஷன் குறித்து தகவல் வெளியாகி வருவதுண்டு. இதில் மக்களிடம் இருந்து அதிக வாக்குகளை பெற்று விஷ்ணு முன்னிலையில் இருக்கிறார்.அதே போல் மக்களிடம் இருந்து குறைந்த வாக்குகளை பெற்றுள்ள மாயா தான் இந்த வாரம் வெளியேற போகிறார் என தெரியவந்துள்ளது.


மாயாவை போலவே நிக்சனுக்கும் மக்களிடம் இருந்து குறைந்த வாக்குகள் கிடைத்துள்ளது. ஆகையால் இவர்கள் இருவரில் ஒருவர் தான் இந்த வாரம் எலிமினேஷன் ஆவார் என்றும் கூறப்படுகின்றது.


Advertisement

Advertisement