• Dec 27 2024

விஜயகாந்த் அடக்கம் செய்யவுள்ள சந்தனப்பேழையில் இடம்பெற்றுள்ள வாசகம்- கேப்டனின் பிரமாண்ட இறுதி ஊர்வலம்!

stella / 11 months ago

Advertisement

Listen News!

கடந்த சில ஆண்டுகளாக உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த விஜயகாந்த், கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சென்னையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று சிகிச்சை பலன் அளிக்காமல் காலமானார்.

இவருடைய உடலுக்கு மக்களும், திரையுலக நட்சத்திரங்களும், அரசியல் பிரமுகர்களும் இறுதி அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். விஜயகாந்தின் மறைவுக்கு பின் அவர் செய்த பல நல்ல விஷயங்கள் குறித்து தகவல் வெளியாகி வருகிறது.


இந்த நிலையில் நடிகர் விஜய் நேற்றைய தினம்  நேரில் சென்று அஞ்சலி செலுத்தி இருந்தார். இது குறித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது. தொடர்ந்து அஜித்தும் பிரேமலதாவுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு இரங்கல் தெரிவித்திருந்தார்.

மேலும் விஜயகாந்த் அடக்கம் செய்யப்படும் சந்தனப் பேழையில் புரட்சிக் கலைஞர் கேப்டன் விஜயகாந்த் என வாசகம் எழுதப்பட்டுள்ளது.மேலும் இவரின் இறுதி ஊர்வலமும் பிரமாண்டமாக நடைபெற்று வருகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது. 


Advertisement

Advertisement