• Dec 25 2024

விபத்தில் சிக்கி காயமடைந்த TFF வாசன் யார் தெரியுமா...? பலருக்கும் தெரிந்திடாத உண்மைகள் இதோ..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

யூடியூப் பக்கத்தில் பைக் ரைடிங் வீடியோக்களைப் பதிவிட்டதன் மூலம் பிரபல்யமானவர் தான் TTF வாசன். இவர் அடிக்கடி  பைக்கில் அதிக வேகமாக சென்று சர்ச்சைகளில் மாட்டிக்கொள்வதை வாடிக்கையாக வைத்திருக்கின்றார். இந்நிலையில் TFF வாசன் யார்,எப்படி மக்கள் மத்தியில் பிரபலமானார் என்பது குறித்துப் பார்ப்போம்.


அந்தவகையில் சிறுவயதில் இருந்தே பைக்குகள் மீது தீராத மோகம் கொண்ட இவர் இவர் கோவை காரமடை அருகே உள்ள மலை கிராமமான வெள்ளியங்காடு என்ற இடத்தினைச் சேர்ந்தவர். இவரின் தந்தையான பாண்டியன் ஒரு சப் சப் இன்ஸ்பெக்டர் ஆவார். 

TFF வாசன் 10ம் வகுப்பில் நல்ல மார்க் எடுத்தால் பைக் வாங்கி தருவதாக தந்தை கூறியிருந்தார். இதனையடுத்து அவரும் நன்றாக படித்து 400 மார்க் தந்தையிடமிருந்து பைக் வாங்கினார். இருப்பினும் துரதிஷ்டவசமாக சில நாட்களில் வாசனின் தந்தை இறந்து விட்டார்.


இதனைத் தொடர்ந்து கல்லூரியில் படித்துக்கொண்டிருக்கும் போதே வேலைக்கும் சென்றார் வாசன். அந்த சமயத்தில் தான் சம்பாதித்த சொந்தப் பணத்தில் (1.5 லட்சம்) யமஹா பைக் வாங்கினார். தான் வாங்கிய அந்த பைக்கில் நீண்ட தூரம் மிகவும் வேகமாக மற்றவர்கள் வியந்து பார்க்கும் அளவிற்கு பயணம் செய்து வந்தார்.

பின்னர் டுவின் திராட்லர்ஸ் பேமிலி யூடியூப் பக்கத்தை தொடங்கி அதில் தான் பைக் ஓடுகின்ற வீடியோக்களை பதிவிட்டு வந்தார். இவரின் வீடியோக்களிற்கு பல இளசுகள் அடிமையாகினர். இதனால் மில்லியன் கணக்கில் பாலோவர்களும் கிடைத்து ரசிகர்கள் கூட்டமும் அதிகமானது. 


வாசனிடம் கவாசகி, ராயல் என்பீல்டு, ஆர் 15, அப்பாச்சி பல விதமான வண்டிகள் உண்டு. அதில் தற்போது வாசன் பயன்படுத்தி வரும் கவாசகி பைக்கின் விலை 10 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் எனக்கூறப்படுகின்றது. இவருக்கு எப்பபோதும் எந்த சந்தர்ப்பத்திலும் உதவியாக இருப்பது அவரது நண்பர்களான அஜீஸ், அருண் ஆகியோர் தான். வீடியோ வெளியிடுவதற்கு இவருக்கு பல வழிகளில் உதவி வருகின்றனர்.

வாசனின் மிகப்பெரிய கனவு என்னவெனில் லண்டனுக்கு தனது பைக்கில் செல்ல வேண்டும் என்பது தான். இவ்வாறாக சமூக வலைத்தளங்களில் சாதனை படைத்த இவர் செல் அம்மின் இயக்கத்தில் தற்போது மஞ்சள் வீரன் என்கிற படத்தில் ஹீரோவாக நடிக்கிறார். 


பைக் பயணம் மற்றும் யூடியூப் வருமானத்தையே நம்பியே இவரது வாழ்க்கைப் பயணம் நகர்கிறது. அந்தவகையில் இவரின் யூடியூப் மூலம் மட்டும் மாதந்தோறும் நான்கு முதல் ஐந்து லட்சம் வரை வருமானம் கிடைக்கின்றது. இவர் அதிவேகமாக பைக் ஓட்டுவதால் இவர் மீது பல தடவைகள் வழக்குப் பதிவும் இடம்பெற்றிருக்கின்றது..

இந்நிலையில் தற்போது அதிவேகமாக பைக்கில் சென்று கொண்டிருந்தபோது வீலிங் செய்ய முற்பட்டதால், பைக் அவரது கட்டுப்பாட்டை இழந்து நடுரோட்டில் குட்டிக்கரணம் அடித்து அருகில் இருந்த பள்ளத்தில் விழுந்து காயம் ஏற்பட்டுள்ளது. இவர் விரைவில் குணமடைய வேண்டி ரசிகர்கள் இறைவனைப் பிரார்த்தித்து வருகின்றனர்.

Advertisement

Advertisement