• Dec 25 2024

சுந்தரி சீரியல் நடிகர் கிருஷ்ணா யார் தெரியுமா?- திருமகள் சீரியல் நாயகியுடன் இப்படி ஒரு உறவில் இருக்கின்றாரா?

stella / 2 years ago

Advertisement

Listen News!

சன்டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் சுந்தரி. கணவன் ஏமாற்றினாலும் கல்வியில் சாதிக்க வேண்டும் என்று நினைக்கும் பெண்ணின் வாழ்க்கையை வெளிப்படுத்தும் சீரியலாகே ஒளிபரப்பாகி வருகின்றது. இந்த நிலையில் இந்த சீரியலில் கிருஷ்ணா என்னும் கதாப்பாத்திரத்தில் நடித்து வரும் பிரபலம் குறித்து தான் தற்பொழுது பார்க்கப்போகின்றோம்.

அதாவது அவருடைய இயற்பெயர் அர்விஸ். இவர் 1988 ஆகஸ்ட் மாதம் 12ம் திகதி கோவையில் பிறந்துள்ளார். ரொம்பவும் கெட்டிக்காரப்பையனான இவர் கோல்ட் மெடல் எல்லாம் வாங்கி இருக்கின்றாராம். நடனத்தின் மீது இருந்த ஈடுபாடு காரணமாக தான் மீடியாவுக்குள்ளேயே நுழைந்தாராம்.


அதன்படி மானாட மயிலாட சீசன் 8 நிகழ்ச்சியில் முதல் முதலாக நடனமாடினாராம். தொடர்ந்து ஜோடி சீசன் 9 இலும் தான் நடனமாடினாராம். தொடர்ந்து இவரது நடிப்புத்திறமையை பார்த்த நடிகர் மனோபாலா பாராட்டியதால் தென்றல் என்னும் சீரியலில் ஆதி என்னும் கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து மின்னலே செல்லமே பாசமலர் வாணிராணி அழகி போன்ற சன்டிவி சீரியல்களிலும் விஜய் டிவியில் ஒளிபரப்பான சின்னத்தம்பி சீரியலிலும் நடித்திருக்கின்றாராம். இருப்பினும் இந்த சீரியல்கள் இவருக்கு நல்லதொரு அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுக்கவில்லை.


இதனால் நடித்தால் ஹுரோவாக மட்டும் தான் நடிப்பேன் என்று காத்திருந்தவருக்கு கிடைத்த வாய்ப்பு தான் சுந்தரி சீரியல். இந்த சீரியல் மூலம் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி வைத்துள்ளாராம். மேலும் இவர் திருமகள் சீரியல் கதாநாயகியான அரிகாவுடன் இணைந்து நிறைய ரீல்ஸ் எல்லாம் செய்த வருகின்றாராம். அத்தோடு டேட்டிங் செய்தும் வருகின்றனராம். இருப்பினும் இவர்களுக்கிடையில் என்ன உறவு இருக்கு என்பது அவர்கள் கூறினால் தான் தெரிய வரும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement