பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் 10-வது சீசன் தொடங்கியுள்ள நிலையில், முதல் வாரத்திலேயே போட்டியாளர்களுக்கு இடையே பல்வேறு கருத்து மோதல்கள் மற்றும் சர்ச்சைகள் உருவாகி வருகின்றன. அதேபோல், நிகழ்ச்சியின் தொகுப்பாளர் விஜய் சேதுபதி பேசும் கருத்துக்களும் சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து விவாதத்தை ஏற்படுத்தி வருகின்றன.
அந்த வகையில், சமீபத்திய எபிசோட்டில் பொறுப்பில் இருப்பவர்கள் தங்களது செயல்களுக்கு பொறுப்பேற்க வேண்டும் என்பது குறித்து விஜய் சேதுபதி பேசிய கருத்துக்கள் தற்போது வைரலாகி வருகின்றன.

“தேர்ந்தெடுப்பதற்கு ஆள் இருக்கிறார்கள். ‘Yes, I am bad! I have a right to kill people’ என்று சொல்லிவிடலாமா? இரண்டு சொட்டுக் கண்ணீருக்கு மயங்கிவிடுவீர்கள் என்றால், எதற்குக் கருத்து தெரிவிக்கிறீர்கள்?” என அவர் கேள்வி எழுப்பினார்.
மேலும், பொறுப்பில் இருப்பவர்களிடம் கருத்து கேட்கப்பட்டால் அதற்கு பதில் சொல்ல வேண்டும் என்றும், அதுதான் அவர்களது வேலை என்றும் குறிப்பிட்டார். அதற்காக அழுது சமாளிப்பது சரியல்ல என்றும் அவர் தெரிவித்தார்.
தொடர்ந்து, “நல்லவன் வேடம் போடுபவர்கள் எவ்வளவு உறுதியாக வேண்டுமானாலும் பேசட்டும். ஆனால், அனைவருக்கும் சிந்திக்கத் தெரிந்திருக்க வேண்டுமே!” என்று கூறிய விஜய் சேதுபதி, அழுகிற ஒருவருக்கு ஆதரவாக செல்ல வேண்டாம் என்று தான் கூறவில்லை என்றும் விளக்கினார்.
ஆனால், வெறும் உணர்ச்சிவசப்பட்டு ஒருவரை ஆதரிப்பதால் உண்மையை பார்க்காமல் போய்விடக்கூடும் என்றும், அப்படி நடந்தால் “டம்மியாகவும், ஜோக்கராகவும்” தெரிந்துவிடுவீர்கள் எனவும் அவர் கூறினார். இந்த பேச்சு தற்போது ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Listen News!