• Sep 17 2026

என் உடையை பார்த்து பண்பாட்டை தீர்மானிக்காதீங்க.! – நடிகை ஐஸ்வர்யா லட்சுமி ஆவேசம்

shali / 3 days ago

Advertisement

Listen News!

ஐஸ்வர்யா லட்சுமியின் உடை குறித்து சமூக வலைத்தளங்களில் எழுந்த விமர்சனங்களுக்கு அவர் அளித்துள்ள பதில் தற்போது கவனம் பெற்றுள்ளது. ஒரு பெண்ணின் பண்பாட்டை அவரது ஆடை அல்லது உடல் அமைப்பை வைத்து மட்டும் தீர்மானிக்க முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.

சமூக வலைத்தளங்களில் பிரபலங்கள் அணியும் உடைகள் குறித்து தொடர்ந்து பல்வேறு கருத்துகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக நடிகைகள் வெளியிடும் புகைப்படங்கள் மற்றும் அவர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் அணியும் ஆடைகள் தொடர்பாக சிலர் கடுமையாக விமர்சிப்பதும் வழக்கமாகியுள்ளது. அந்த வகையில், நடிகை ஐஸ்வர்யா லட்சுமியின் உடை குறித்தும் இணையத்தில் விவாதங்கள் எழுந்தன.


இதற்கு பதிலளித்துள்ள ஐஸ்வர்யா லட்சுமி, “ஒரு பெண்ணின் ஆடையிலோ, உடல் அமைப்பிலோ மட்டும் பண்பாடு இல்லை. பிறரிடம் நாம் எந்த விதத்தில் நடந்துகொள்கிறோம் என்பதில் தான் உண்மையான பண்பாடு இருக்கிறது” எனக் கூறியுள்ளார்.

மேலும், நாட்டின் GDP குறித்தோ, வயதான பெற்றோர்கள் கைவிடப்படுவது குறித்தோ இங்கு யாரும் தீவிரமாக விவாதிப்பதில்லை. ஆனால், தனது ஆடை குறித்து மட்டும் ஏன் இவ்வளவு தீவிரமாக பேசுகிறார்கள் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஆரம்பத்தில் இதுபோன்ற விமர்சனங்களை சிரித்துக்கொண்டே கடந்து சென்றதாக கூறிய அவர், தற்போது தனது உடையைப் பற்றி சமூகமே இவ்வளவு தீவிரமாக விவாதிப்பது தன்னை உலுக்கியுள்ளதாக தெரிவித்துள்ளார். ஐஸ்வர்யா லட்சுமியின் இந்த கருத்து தற்போது சமூக வலைத்தளங்களில் பேசுபொருளாகியுள்ளது.

Advertisement

Advertisement