• Sep 17 2026

யாரும் எதிர்பார்க்காத வைல்ட்கார்டு என்ட்ரி! பிக்பாஸ் வீட்டுக்குள் திடீரென களமிறங்கிய நடிகை

shali / 3 days ago

Advertisement

Listen News!

பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் 10-வது சீசன் தொடங்கி ஒரு வாரத்தை நிறைவு செய்துள்ள நிலையில், முதல் வாரத்திலேயே போட்டியாளர்களுக்கு இடையே பல்வேறு பிரச்சனைகள், கருத்து வேறுபாடுகள் மற்றும் சர்ச்சைகள் உருவாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றன. 

குறிப்பாக நிகழ்ச்சியின் தொகுப்பாளர் விஜய் சேதுபதி அரசியல் குறித்து பேசிய சில கருத்துகள் சமூக வலைத்தளங்களில் விவாதத்தையும் விமர்சனங்களையும் ஏற்படுத்தியுள்ளன.


இந்நிலையில், பிக்பாஸ் வீட்டிற்குள் தற்போது புதிய வைல்ட் கார்டு என்ட்ரி கொடுக்கப்பட்டுள்ளது. பிரபல நடிகை ஆனந்தி தான் இந்த சீசனின் முதல் வைல்ட் கார்டு போட்டியாளராக வீட்டிற்குள் நுழைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவரின் வருகை நிகழ்ச்சியில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ் சினிமாவில் பல்வேறு படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் தான் ஆனந்தி.

இப்படியான சூழலில் பிக் பாஸ் வீட்டிற்குள் ஆனந்தி களமிறங்கியிருப்பது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. அவர் மற்ற போட்டியாளர்களுடன் எப்படி பழகப்போகிறார், ஏற்கனவே இருக்கும் பிரச்சனைகளில் அவரது நிலைப்பாடு என்னவாக இருக்கும் என்பது தான் தற்போது ரசிகர்களின் முக்கிய கேள்வியாக உள்ளது.

Advertisement

Advertisement