• Sep 17 2026

விஜய்யை சந்திக்கத் தான் லண்டன் சென்றாரா கீர்த்தி? தரமான பதிலடி கொடுத்த நடிகை.!

shali / 5 days ago

Advertisement

Listen News!

கீர்த்தி சுரேஷ் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். குறிப்பாக, மறைந்த நடிகை சாவித்திரியின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவான ‘மகாநடிகை’ திரைப்படத்தில் சாவித்திரி கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் பாராட்டை பெற்றதுடன், சிறந்த நடிகைக்கான தேசிய விருதையும் வென்று தனது திறமையை நிரூபித்தார். தற்போது அவரது நடிப்பில் ‘டோரோதி’ உள்ளிட்ட பல படங்கள் உருவாகி வருகின்றன.

இந்நிலையில், கீர்த்தி சுரேஷ் லண்டன் சென்றதாக கடந்த சில நாட்களாக தகவல்கள் வெளியாகி வந்தன. அதே நேரத்தில் நடிகரும் தமிழக முதல்வருமான விஜய்யும் லண்டன் சென்றிருந்ததால், இருவரும் சந்திக்கப் போகிறார்களா, ஏதேனும் முக்கிய காரணத்திற்காக லண்டனில் ஒன்றாக இருக்கிறார்களா என சமூக வலைத்தளங்களில் பல்வேறு விதமான யூகங்கள் பரவின.


இந்த தகவல்கள் தொடர்ந்து வைரலான நிலையில், கீர்த்தி சுரேஷ் தற்போது அதற்கு தனது பாணியில் பதிலடி கொடுத்துள்ளார். சமூக வலைத்தளங்களில் பரவி வந்த பதிவுகளை பார்த்த அவர், “ஆமாம் சரி.. லண்டனில் தான் டொராண்டோ சர்வதேச திரைப்பட விழா நடக்கிறது..” என கிண்டலாக குறிப்பிட்டுள்ளார்.

கீர்த்தியின் இந்த பதிவு, லண்டன் பயணத்திற்கான காரணம் குறித்து வெளியான யூகங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. அவரது ‘டோரோதி’ திரைப்படம் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட உள்ளதால், அதுதொடர்பான நிகழ்வுகளுக்காகவே அவர் சென்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement