தமன்னாவுக்கு இருக்கும் ரசிகர்கள் பட்டாளம் பற்றி தனியாக சொல்ல வேண்டிய அவசியமே இல்லை. தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழி படங்களில் நடித்து தனக்கென மிகப்பெரிய ரசிகர்கள் வட்டத்தை உருவாக்கியுள்ள தமன்னா பாட்டியா, தனது நடிப்பு மட்டுமின்றி நடனத்தாலும் ரசிகர்களை கவர்ந்து வருகிறார். குறிப்பாக அவர் சிறப்பு தோற்றத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடினாலே, அந்த பாடலுக்கு தனி எதிர்பார்ப்பு உருவாகி விடுகிறது.
இந்நிலையில், நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக தமன்னா அணிந்து வந்துள்ள அழகிய சேலை ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளது. பாரம்பரிய தோற்றத்தில் மிகவும் நேர்த்தியாகவும், அதே நேரத்தில் கவர்ச்சியாகவும் போஸ் கொடுத்துள்ள அவரது புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக வைரலாகி வருகின்றன.

சேலையில் தமன்னாவின் அழகு இன்னும் அதிகமாக வெளிப்படுவதாக ரசிகர்கள் பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர். குறிப்பாக அவரது ஹேர் ஸ்டைல், மேக்கப் மற்றும் அணிந்திருந்த ஆபரணங்கள் என ஒவ்வொரு விஷயமும் அவரது லுக்கிற்கு கூடுதல் அழகு சேர்த்துள்ளதாக ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.

நிகழ்ச்சிக்காக எடுக்கப்பட்ட இந்த போட்டோஷூட் புகைப்படங்களை தமன்னா தனது சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்துள்ள நிலையில், ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருகின்றனர். தற்போது இந்த லேட்டஸ்ட் புகைப்படங்கள்தான் இணையத்தில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வரும் ஹாட் டாபிக்காக மாறியுள்ளது.
Listen News!