• Sep 17 2026

விநாயகர் சதுர்த்தியில் சர்ப்ரைஸ்! சூர்யாவின் ‘சீன்’ படக்குழு வெளியிட்ட ஸ்பெஷல் போஸ்டர்

Aathira / 2 days ago

Advertisement

Listen News!

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நடிகர் சூர்யா நடிக்கும் ‘சீன்’ திரைப்படத்தின் படக்குழு ரசிகர்களுக்கு சிறப்பு வாழ்த்து தெரிவித்துள்ளது.

இதற்காக, விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகளுடன் கூடிய பிரத்யேக போஸ்டர் ஒன்றையும் படக்குழு இன்று வெளியிட்டுள்ளது.

நடிகர் சூர்யாவின் திரைப்பயணத்தில் உருவாகும் 47ஆவது திரைப்படமாக ‘சீன்’ அமைந்துள்ளது. இப்படத்தை மலையாள திரையுலகில் கவனம் பெற்ற இயக்குநர் ஜித்து மாதவன் இயக்கி வருகிறார்.

சூர்யாவின் புதிய தயாரிப்பு நிறுவனமான ழகரம் ஸ்டூடியோஸ் தயாரிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு கேரளா மற்றும் சென்னையில் பல்வேறு பகுதிகளில் நடைபெற்றது. படப்பிடிப்பு பணிகள் அண்மையில் முழுமையாக நிறைவடைந்துள்ளதாக படக்குழு காணொளி மூலம் அறிவித்திருந்தது.

சூர்யா நடிப்பில் அண்மையில் வெளியான ‘கருப்பு’ மற்றும் ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ திரைப்படங்களின் வெற்றியைத் தொடர்ந்து வெளியாகவுள்ள படம் என்பதால், ‘சீன்’ திரைப்படத்தின் மீதும் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இந்நிலையில், படத்தின் வெளியீட்டிற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், நவம்பர் 6ஆம் திகதி ‘சீன்’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

Advertisement

Advertisement