• Dec 26 2024

சன்னி லியோன் கூட பேசமுடியலையே..!! மேடையில் வருத்தப்பட்ட பேரரசு! காரணம் தெரியுமா?

Aathira / 3 months ago

Advertisement

Listen News!

தென்னிந்திய சினிமாவில் பிரபல நடன இயக்குனராகவும் நடிகராகவும் திகழ்ந்து வருபவர்தான் பிரபு தேவா. இவர் தமிழில் மட்டும் இல்லாமல் தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட பலமொழிகளிலும் படங்களை இயக்கி வருகின்றார். இவர் நடிப்பில் இறுதியாக கோட் திரைப்படம் வெளியாகியிருந்தது.

தற்போது பிரபுதேவா நடிப்பில் உருவாகியுள்ள பேட்ட ராப்  திரைப்படம் எதிர்வரும் 27ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. குறித்த இசை வெளியீட்டு விழாவில் இந்த படத்தின்  கதாநாயகியான வேதிகா, சன்னி லியோன், பேரரசு உள்ளிட்ட பலர் கலந்து உள்ளார்கள்.

இந்த திரைப்படம் முழுக்க முழுக்க நடனம் தொடர்பான கதை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளதால் இது ரசிகர்களுக்கு பிடிக்கும் என படக் குழு நம்பிக்கை தெரிவித்துள்ளது. காதலர் தினத்தை முன்னிட்டு இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது.

அதன்பின் பேட்ட ராப் படத்தின் டீசரை நடிகர் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி வெளியிட்டார். டீசரில் சன்னி லியோன் தலைகீழாக பல்டி அடிக்கும் காட்சிகளும் இடம் பெற்றிருந்தது. படத்தின் பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது.


இந்த நிலையில் பேட்ட ராப் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய இயக்குனர் பேரரசு சன்னி லியோனுடன் பேசுவதற்கு ஹிந்தி தெரியவில்லையே என வருத்தப்பட்டுள்ளார். 

அதன்படி அவர் கூறுகையில், முன்பெல்லாம் இந்தி தெரியவில்லை என்றால் மகிழ்ச்சியாக இருக்கும். இந்தி தெரியாது போடா போடா எனக் கூறுவோம். ஆனால் இப்போது இந்தி தெரியவில்லையே என்று வருத்தமாக உள்ளது. அதற்கு காரணம் எனக்கு அருகில் நடிகை சன்னிலியோன் அமர்ந்துள்ளார். அவரிடம் இரண்டு வார்த்தை கூட பேச முடியவில்லை. இந்தி தெரிந்து இருந்தால்  அவரிடம் பேசி இருக்க முடியும் இதற்காகவே இந்தி கத்துக்கணும் என நகைச்சுவையாக கூறியுள்ளார்.

Advertisement

Advertisement