• Dec 26 2024

ஈஸ்வரியிடம் உங்க பாட்சா பலிக்காது கோபி.. சாதிக்க தயாரான இனியாவுக்கு கிடைத்த நோஸ்கட்

Aathira / 3 months ago

Advertisement

Listen News!

பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய எபிசோட்டில், எழில்  வீட்டுக்கு செழியன் வந்து அங்கு அனைவரும் ஒன்றாக இருந்து பிரியாணி சாப்பிடுகிறார்கள். மேலும் செழியன் எழிலை நினைக்க ரொம்ப பெருமையாக இருப்பதாகவும், இதுவரை நாம் கஷ்டப்பட்டதில்லை என்று சொல்லி பேசுகின்றார். அத்துடன் எழில் வீட்டிற்கு சாமான் வாங்கி கொடுக்கின்றார்.

அந்த நேரத்தில் கோபியும் அங்கு வருகின்றார். நிலாவுக்கு பிடித்த சாமான்களை கொடுத்துவிட்டு, அவரிடம் பணமும் கொடுக்கின்றார். அதற்கு எழில் வேண்டாம் என்று சொல்லவும் தான் தனது பேத்திக்கு கொடுப்பதாக சொல்கின்றார்.

இதைத்தொடர்ந்து பாக்கியா வீட்டில் எல்லோரும் கிச்சனில் இருந்து பேசிக் கொண்டிருக்க, செல்வி போனில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி பார்த்துக் கொண்டிருக்கின்றார். இதன்போது அந்த பிள்ளை வெற்றி பெற்றால் எல்லோருக்குமே ரொம்ப பெருமை. இதுவரை பேசாத சொந்தங்கள் எல்லாம் தற்போது வந்து பேசுவதாக சொல்லிக் கொண்டிருக்க, இனியாவுக்கு திடீரென ஒரு ஐடியா தோன்றுகின்றது.


அதாவது தாத்தா சொன்னது போல தான் எதுவும் சாதிக்க வேண்டும் என்ற நோக்கில் தான் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பாடி ஜெயிக்க போவதாக எல்லோருக்கும் அதிர்ச்சி கொடுக்கின்றார். இதைக் கேட்டு எல்லோரும் விழுந்து விழுந்து சிரிக்கின்றார்கள்.

மேலும் அந்த நேரத்தில் ஜெனி பாடி காட்டுமாறு சொல்ல, இனியா  பாடிய பாடலை கேட்டு எல்லாரும் சிரிப்பை அடக்க முடியாமல் சிரிக்கின்றார்கள். இதனால் ஜெனி வேற எதுவும் ட்ரை பண்ணுவோம் என்று சொல்லி முடிக்கின்றார்.

அதன் பின்பு இனியாவை ஈஸ்வரி காலேஜ்க்கு அழைத்து செல்ல தயாராகின்றார். அந்த நேரத்தில் அங்கு வந்த கோபி தன்னுடன் வருமாறு சொல்லவும் ஈஸ்வரி அதனை கண்டு கொள்ளாமல் ஆட்டோவில் செல்கின்றார்.

இதனால் பின்னாலே சென்று இனியா காலேஜுக்குள் சென்றதும் ஈஸ்வரியுடன் மனம் நொந்து பேசுகின்றார் கோபி. மேலும் தான் இதுவரையில் எல்லாத்தையும் பொறுத்துக் கொண்டதாகவும், எல்லா அசிங்கத்தையும் சகித்து கொண்டதாகவும் என்னால் நீங்கள் ஜெயிலுக்குப் போகவில்லை என்றும் சொல்கின்றார் ஆனாலும் ஈஸ்வரி அதனை கண்டு கொள்ளாமல் இருக்கின்றார் இதுதான் இன்றைய எபிசோட்.

Advertisement

Advertisement