விஜய் டீவியில் மக்கள் மனங்களை வென்ற நகைச்சுவை மற்றும் சமையல் நிகழ்ச்சியான ‘குக் வித் கோமாளி’, தற்போது 6வது சீசனை தொடங்க தயாராகிக் கொண்டிருக்கிறது. சிரிக்கத் தெரியாதவர்களையே சிரிக்க வைக்கும் இந்த நிகழ்ச்சி, ஆரம்பத்திலிருந்தே ரசிகர்கள் மத்தியில் இடம் பிடித்திருப்பதோடு, பல பிரபலங்களை புகழ் பெற்றவர்களாக மாற்றியுள்ளது.
இந்நிகழ்ச்சி பற்றி மட்டுமல்ல, அதில் கலந்துகொண்ட பிரபலங்கள் பற்றி பேசும்போதும் சினிமா பிரபலங்களிடம் கூட போட்டித் தன்மை நிலவுகிறது. இதற்கு சமீபத்திய உதாரணமாக, நடிகர் நானி மற்றும் யூடியூபர் இர்பான் இடையே நடந்த நகைச்சுவையான உரையாடல் ஒன்று இணையத்தில் வைரலாகியுள்ளது.
2019ம் ஆண்டு பவித்ரா மணி இயக்கத்தில் ஆரம்பிக்கப்பட்ட ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சி, வெறும் சமையல் மட்டும் இல்லாமல், ரசிகர்களை சிரிப்பில் மூழ்கடித்த வெற்றிப் பயணமாகவும் உருவெடுத்தது. கோமாளிகள், அறியப்படாத போட்டியாளர்களோடு இணைந்து நடத்தும் இந்த ஷோ, ஒரு புது முயற்சியாக தொடங்கியிருந்தாலும், இன்று அனைவராலும் பேசப்படும் ஒரு கலாசார நிகழ்ச்சியாக மாறியுள்ளது.
தற்போது, 6வது சீசன் வருகின்ற மே 4ம் திகதி முதல் ஒளிபரப்பாகவுள்ளது. இதற்கான புரமோஷன்கள் விஜய் டீவி மற்றும் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகிக் கொண்டிருக்கின்றன. தற்பொழுது தயாரிப்பு நிறுவனம், இயக்குநர் மற்றும் நிகழ்ச்சியின் பின்னணிக் குழுவில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. புதிய சீசனில், புதிய கோமாளிகள் மற்றும் போட்டியாளர்கள் கலந்துகொள்ள உள்ளதாகவும், சில பழைய முகங்கள் மீண்டும் பங்கேற்கலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்த சூழ்நிலையில், தெலுங்கு திரையுலகில் ஹீரோவாக வலம் வரும் நானி, தனது புதிய படமான "ஹிட்" புரமோஷனில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றார். இப்படம், தமிழிலும் டப்பிங் செய்யப்பட்டு வெளியாக இருக்கிறது. அதற்காகவே தமிழில் பிரபலமான யூடியூபர்களிடம் பேட்டிகளும், கலந்துரையாடல்களும் நடத்தப்படுகின்றன.
அந்த வகையில், ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான யூடியூபரும், வலைப்பதிவாளருமான இர்பான், தனது யூடியூப் சேனலில் நானியுடன் ஒரு சுவாரஸ்யமான பேட்டியை வெளியிட்டுள்ளார். இந்த பேட்டியில், இர்பான் ‘நான் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் 3வது இடம் வந்தேன். எனக்கு ஓரளவு சமையல் தெரியும்’ என நானியிடம் கூறினார். இதைக் கேட்ட நானி, சிரித்தவாறே, “அந்த நிகழ்ச்சியில் யாருக்குமே சமைக்கத் தெரியாது... அதுல நீ 3வது இடமா?” என ரோஸ்ட் செய்தார். இத்தகவல் தற்பொழுது சமூக ஊடகங்களில் பரவி வருகின்றது.
Listen News!