• Apr 24 2026

அனைவருக்கும் வாழ்த்துக்கள் விரைவில் சந்திப்போம் தளபதி விஜய்யின் x தள பதிவு இதோ!

Nithushan / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு நட்சத்திரங்கள் முன்னிலையில் இருப்பார்கள் அவ்வாறே சமீபத்தில் அடுத்த சூப்பர்ஸ்டார் யார் என்ற கேள்விக்கு பதிலாக நிற்கும் தளபதி விஜயின் x தள பதிவு வைரலாகி வருகின்றது.


தளபதி என மக்களால் அழைக்கப்படும் விஜய் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்தாலும் கூட சமீபத்தில் இவர் அரசியளிலும் இறங்கியுள்ளார். இவர் கடந்த 12 ஆம் வகுப்பு தேர்வில் சித்தியடைந்த மாணவர்களை நேரில் அழைத்து பரிசுகள் வழங்கி பாராட்டியிருந்தார்.


அவ்வாறே இம்முறை 12 ஆம் , 10ஆம் வகுப்பு தேர்வுக்கு பங்குபற்றிய மாணவர்களுக்கு  பதிவொன்றை போட்டுள்ளார். அதில் "தமிழ்நாடு, புதுச்சேரியில் அண்மையில் நடைபெற்ற 12 மற்றும் 10ஆம் வகுப்புப் பொதுத் தேர்வுகளில் தேர்ச்சி பெற்ற மாணவச் செல்வங்கள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த பாராட்டுகள். மற்றவர்கள் தன்னம்பிக்கையுடன் மீண்டும் முயன்று, வெற்றி பெற வாழ்த்துகள். விரைவில் நாம் சந்திப்போம்! " என கூறியுள்ளார்.


Advertisement

Advertisement