• Dec 25 2024

ஸ்டார் பட கிளைமேக்ஸ் காட்சியில் இப்படியொரு ட்விஸ்ட்டா? முழு விமர்சனம்

Aathira / 7 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களுள் ஒருவராக திகழ்பவர் தான் கவின். இவர் நடித்த டாடா படம் தான் இவரது கேரியரில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது.

இதைத்தொடர்ந்து பியார் பிரேமா காதல் படம் மூலம் ரசிகர்களை கவர்ந்த இளன் இயக்கத்தில் ஸ்டார் படத்தில் நடித்துள்ளார் கவின். இந்த படம் இன்று தியேட்டர்களில் வெளியாகி உள்ளது.

இந்தப் படத்தில் அதிதி போங்ஹர், ப்ரீத்தி முகுந்தன், லால், கீதா கைலாசம் என பலரும் நடித்துள்ளார்கள். இந்தப் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார்.

இந்த நிலையில், இன்றைய தினம் வெளியான ஸ்டார் படத்தின் விமர்சனம் வெளியாகி உள்ளது. அதில் என்ன நடக்குது என்று பார்ப்போம்.

இந்த படத்தில் சின்ன வயசிலிருந்து சினிமாவில் நடிகராக வேண்டும் என்ற கனவோடு இருக்கும்  மகனின் கனவும், அதற்கு துணையாக இருக்கும் தந்தையின் அன்புமே இந்த படத்தின் கதையாக காணப்படுகிறது.

இந்தப் படத்தில் சிறு வயது முதலே நடிப்பின் மீது தீரா காதல் கொண்ட சாதாரண குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர், நடிப்பில் அவன் சாதிக்க கிடைத்த ஒரு முக்கியமான வாய்ப்பின் போது சந்திக்கும் விபத்து அவனது வாழ்வை எப்படி திருப்பி போடுகிறது? அந்த விபத்திலிருந்து எப்படி மீண்டார்? ஸ்டாராக கோலாச்சினானா? என்பதே படத்தின் கதை. 

இந்த படத்தில் கவின் கலையாக நடித்துள்ளதோடு அவரது நடிப்பில் நிதானம் காணப்படுகின்றது. பள்ளி, கல்லூரி, கனவு, வாழ்க்கை, வேலை என அனைத்து பருவங்களிலும் கச்சிதமாக நடித்துள்ளார். எனினும் இன்னும் சில இடங்களில் சிறப்பாக நடித்திருக்கலாம் என்று தோன்றுகின்றது.


கவினுக்கு அப்பாவாக நடித்திருக்கும் லால் ஒவ்வொரு காட்சியிலும் அன்பை நடிப்பால் பொழிந்து ரசிகர்களை கவர்ந்துள்ளார். முதல் பாதியில் கதாநாயகனாக நடித்திருக்கும் ப்ரீத்தி அழகால் ரசிகர்களை கவர்ந்துள்ளதோடு, இரண்டாம் பாதியில் கதாநாயகியாக வரும் அதிதி ரசிகர்களை கட்டிபோட்டுள்ளார்.

இந்த படத்திற்கு மிகப்பெரிய பக்கபலமாக இருந்ததே டீசரில்  காட்டப்பட்ட காசு இல்லை என்று கவின் பேசும் வசனம் தான். படத்திலும் அந்த வசனங்கள் ஆங்காங்கே சில இடத்தில் இடம்பெற்றாலும் அதன் வலி பெரிதளவில் உணரவில்லை என்பதே உண்மை.

அத்துடன் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜாவின் இசையும் பக்க பலமாக இருந்துள்ளது. குறிப்பாக மும்பையில் கவின் படும் இன்னல்களின்போது வரும் மெல்லிசைக்கு தியேட்டர்களில் பலத்த வரவேற்பு காணப்பட்டுள்ளது.

இந்த படத்தின் கிளைமேக்ஸ் காட்சியில் ஒரு டுவிஸ்ட் இடம்  பெற்றுள்ளது. அதாவது தமிழ் சினிமாவின் மிகப்பெரிய இயக்குனர் ஒருவர் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளது ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. மொத்தத்தில் குடும்பமாக சென்று பார்க்கக்கூடிய அளவுக்கு ஸ்டார் படம் வரவேற்பை பெறுள்ளது.

Advertisement

Advertisement