• Apr 23 2026

யதார்த்தமான கதையால் வசூலை அள்ளிக் குவிக்கும் "தாய் கிழவி".. வெளியான வசூல் விபரம் இதோ.!

shali / 1 month ago

Advertisement

Listen News!

தமிழ் திரையுலகில் பெண்களை மையமாகக் கொண்ட படங்கள் தற்போது தனித்துவமான இடத்தை பெற்றுள்ளன. இத்தகைய படங்களில் வெளிவந்துள்ள புதிய படம் தாய் கிழவி, பலரின் கவனத்தை ஈர்த்து, திரையரங்குகளில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

சிவகார்த்திகேயன் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் சிவக்குமார் முருகேசன் இயக்கத்தில் உருவான இந்த படத்தில், முன்னணி கதாபாத்திரத்தில் ராதிகா சரத்குமார் நடித்துள்ளார். இதுதான் இயக்குநர் சிவக்குமாருக்கு முதல் படம் என்பது குறிப்பிடத்தக்கது. 


‘தாய் கிழவி’ திரைப்படம், வயதானாலும் மனவுறுதி மற்றும் தன்னம்பிக்கை குறையாத பனுவுத்தாய் என்ற பெண்ணின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு நகர்கிறது. ராதிகா சரத்குமார் இப்படத்தில் கம்பீரத்துடனும் இயல்பான நடிப்புடனும் கதாபாத்திரத்தை உயிர்ப்பித்துள்ளார். 

இந்நிலையில், படம் வெளியான ஐந்தாம் நாளான நேற்று, தாய் கிழவி படம் செய்திருக்கும் வசூல் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. இணையதளங்களில் வெளியிடப்பட்ட அறிக்கைகளின் படி, ஐந்தாவது நாளான நேற்று மட்டும் படம் 2 கோடி 65 லட்சம் ரூபாய் வசூலித்துள்ளது.

இதன் மூலம், படம் வெளியீட்டிலிருந்து இதுவரை மொத்தம் 19 கோடி 30 லட்சம் ரூபாய் வசூலித்து விட்டது என கூறப்படுகிறது. சிறிய படமாக இருந்தாலும், படத்தின் கதைக்களம், நடிப்பு மற்றும் சமூக கருத்து ஆகியவை ரசிகர்களை கவர்ந்துள்ளதால், இது வியப்பான வசூலாக மாற்றியிருக்கிறது.

Advertisement

Advertisement