• Jul 21 2026

பழைய கதைதானா? இல்ல புதுசா ப்ளாஸ்ட் கொடுக்குதா? ப்ளூ சட்டை மாறன் கொடுத்த லாஜிக் ரிசல்ட்

Aathira / 1 month ago

Advertisement

Listen News!

இயக்குநர் சுபாஷ் கே ராஜ் இயக்கத்தில் அர்ஜுன், அபிராமி, ப்ரீத்தி முகுந்தன் உள்ளிட்டோர் நடித்திருக்கும் “ப்ளாஸ்ட்” திரைப்படம் நேற்று  திரையரங்குகளில் வெளியானது.

இந்த கதையில், அர்ஜுன் கராத்தே மாஸ்டராகவும், அவரது மனைவியும் மகளும் குடும்பமாகவும் காட்டப்படுகின்றனர். அவர்கள் சிறு வயதிலிருந்தே தன் மகளுக்கு சமூக பொறுப்பும், தன்னம்பிக்கையும் கற்றுக் கொடுக்கும் பெற்றோராக காணப்படுகின்றனர்..

மற்றொரு பக்கம், ஒரு கார்ப்பரேட் வில்லன் மலைப் பகுதி மக்களை பாதிக்கும் திட்டங்களை வகுக்கிறான். அந்த சூழலில் ஹீரோ குடும்பமும், வில்லனும் எதிரெதிராக மோதிக் கொள்கிறார்கள்.

முதல் 15 நிமிடங்கள் வலுவாக இருந்தாலும், பிற்பகுதியில் வழக்கமான “கார்ப்பரேட் வில்லன் vs ஹீரோ” பாணியில் கதை நகர்கிறது. சில லாஜிக் பிழைகள் இருந்தாலும், திரில்லர் எலிமென்ட்கள் படம் முழுவதும் ஆர்வத்தைத் தருகின்றன. மொத்தத்தில், சமூக கருத்துடன் கூடிய ஆக்ஷன் திரில்லராக இப்படம் அமைந்துள்ளது.


இந்த நிலையில், பிரபல சினிமா விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் தன்னுடைய பாசிட்டிவ் விமர்சனத்தை கொடுத்துள்ளார் அதில் அவர் கூறுகையில்

இப்போ இந்த ‘ப்ளாஸ்ட்’ படம் ஆரம்பத்துல கொஞ்சம் நம்பிக்கை கொடுக்குது. ‘அட ஓகே போல இருக்கே’னு தோணுது. அர்ஜுன் கராத்தே மாஸ்டரா இருக்கார், பிள்ளைக்கு சமூக பொறுப்பு எல்லாம் சொல்லிக்கொடுக்குறார்… ஆரம்பம் நல்லா இருக்கு.

ஆனா அப்புறம் என்னன்னா அதே பழைய கதைதான். கார்ப்பரேட் வில்லன் வருவான், மலை அழிப்பான், பணம் அடிப்பான், ஹீரோ குடும்பத்தோட சண்டை வரும்… இதெல்லாம் நாம எத்தனை படத்துல பார்த்திருக்கோம்.

ஒரு நல்ல விஷயம் என்னன்னா ஆரம்ப 10–15 நிமிஷத்துல கதை எங்கபோகுது அப்படின்னு சரியா செட் பண்ணிடுறாங்க. அது ஓகே.

ஆனா அதுக்கப்புறம் லாஜிக் எல்லாம் கொஞ்சம் பிரச்சனைதான். ஒரே நேரத்துல பல போலீஸ் சாவுறாங்க, வில்லன் கேரக்டரும் அதிகமா வருது… ஆனா பெரிய தாக்கம் இல்லாம போயிடுது.

மொத்தத்துல சொல்லணும்னா… புதுசா எதுவும் இல்ல. பழைய மாதிரி ஒரு ஆக்ஷன் ஃபார்முலா படம். லாஜிக் பாக்காம பார்த்தா ஒரு முறை போய் பார்க்கலாம் அவ்வளவுதான் என தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement