• Jun 17 2026

அடுத்தடுத்து CM விஜயை சந்தித்த முக்கிய புள்ளிகள்..? சிம்ரன் பதிவால் கிளம்பிய கேள்விகள்

Aathira / 4 hours ago

Advertisement

Listen News!

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராக இருந்து தற்போது தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள விஜய்க்கு பல்வேறு தரப்பிலிருந்தும் வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. 

அரசியல் உலகிலும் திரையுலகிலும் அவரின் புதிய பயணம் பெரும் கவனத்தை ஈர்த்து வரும் நிலையில், தற்போது கோலிவுட் நட்சத்திரங்களின் சந்திப்பு சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

இந்த நிலையில், சமீபத்தில் நடிகை சிம்ரன், நடிகர் சிலம்பரசன் (சிம்பு), மற்றும் நடிகர் ஷாம் ஆகியோர் விஜயை நேரில் சந்தித்து தங்கள் மகிழ்ச்சியையும் வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளனர்.

இதைத் தொடர்ந்து நடிகை சிம்ரன் தனது குடும்பத்துடன் விஜயை சந்தித்த பின் சமூக வலைதளத்தில் உணர்ச்சிபூர்வமான பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில் அவர், “பல வருடங்கள் ஒன்றாக நடித்த பிறகு, மாண்புமிகு முதலமைச்சர் திரு விஜயை என் குடும்பத்துடன் சந்தித்தது மகிழ்ச்சி அளிக்கிறது. அவர் கொண்டிருந்த அன்பும் எளிமையும் இன்னும் அதேபோலவே உள்ளது. தமிழகத்தின் முன்னேற்றத்திற்கான அவரது பார்வை உண்மையிலேயே ஊக்கமளிக்கிறது” என தெரிவித்துள்ளார்.


சிம்ரன் மற்றும் விஜய் இணைந்து நேருக்கு நேர், துள்ளாத மனமும் துள்ளும், பிரியமானவளே, உதயா உள்ளிட்ட பல வெற்றிப் படங்களில் நடித்துள்ளனர்.

நடிகர் சிம்புவும் விஜயை நேரில் சந்தித்து, தனது சமூக வலைதளத்தில் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். அதில் அவர், “மாண்புமிகு முதலமைச்சர் விஜய் அண்ணாவை இன்று சந்தித்தது மகிழ்ச்சி. தமிழக மக்களுக்கு அவர் சிறப்பாக பணியாற்ற வாழ்த்துகள்” என பதிவிட்டுள்ளார்.

இந்த சந்திப்பு ரசிகர்கள் மத்தியில் பெரும் கவனத்தை பெற்றுள்ளது. இரு நட்சத்திரங்களின் பரஸ்பர மரியாதை சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளது.


நடிகர் ஷாமும் விஜயை சந்தித்து, மிக எளிமையாக “LOVE U NA” என்று பதிவிட்டுள்ளார். குறுகியதாக இருந்தாலும், இந்த பதிவு ரசிகர்களிடையே பெரும் கவனத்தை பெற்றுள்ளது.

விஜய் முதலமைச்சராக புதிய பயணத்தை தொடங்கியுள்ள நிலையில், திரையுலக நண்பர்களின் ஆதரவும் வாழ்த்துகளும் தொடர்ந்து குவிந்து வருகின்றன. இந்த சந்திப்புகள் பழைய நட்புகளை மீண்டும் நினைவூட்டும் விதமாக ரசிகர்களிடையே பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளதோடு, இதற்கு பின்னால் அரசியல் நகர்வு இருக்கின்றதா என்ற கேள்வியும் எழுந்துள்ளமை குறிப்பிட்டதக்கது. 

Advertisement

Advertisement