• Apr 30 2026

'கர' ஒடிசா சம்பவத்தை ஞாபகப்படுத்துகின்றதா.? மெய் சிலிர்த்து பாராட்டிய மாரி செல்வராஜ்

Aathira / 1 hour ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் புதிய முயற்சியாக, தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள ‘கர’ திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது. 

விக்னேஷ் ராஜா இயக்கத்தில் உருவான இந்த படம், ‘போர் தொழில்’ மூலம் கவனம் பெற்ற இயக்குநரின் அடுத்த முக்கிய முயற்சியாக பார்க்கப்படுகிறது.

1990-களின் ராமநாதபுரத்தை பின்னணியாகக் கொண்டு, வங்கிக் கொள்ளையை மையமாக வைத்து உருவாகியுள்ள ‘கர’, கிராமத்து மண்வாசனையுடன் கூடிய ஆக்சன் திரில்லராக வடிவமைக்கப்பட்டுள்ளது. 

மமிதா பைஜு கதாநாயகியாக நடித்துள்ள இந்தப் படத்தில், கே.எஸ். ரவிகுமார், கருணாஸ், ஜெயராம், சுராஜ் வெஞ்சரமூடு, எம்.எஸ். பாஸ்கர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இசையை ஜி.வி.பிரகாஷ் அமைத்துள்ள நிலையில், ஒளிப்பதிவை தேனி ஈஸ்வர் மேற்கொண்டுள்ளார்.

வேல்ஸ் இன்டர்நேஷனல் பிலிம்ஸ் தயாரிப்பில் உருவான இந்த படம் நாளை திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதற்குமுன்னதாகவே, படத்தை பார்த்த மாரி செல்வராஜ் தனது பாராட்டுகளை வெளிப்படுத்தியுள்ளார்.


அவருடைய பதிவில், 'கர’ எனக்கு மிகச் சிறந்த திரை அனுபவமாக இருந்தது. சிலிர்ப்பு, நெகிழ்வு, சிந்தனை, விறுவிறுப்பு அனைத்தையும் ஒரே நேரத்தில் உணர வைத்த ஒரு நம்பிக்கையான படம். தனுஷ் அவர்களின் நடிப்பு, திரையில் ஒரு ஆழமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது என அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், சமூக உணர்வுகளையும் கதையின் உணர்ச்சியையும் இணைத்து சொல்லும் விதத்தில் ‘கர’ தனித்துவம் பெறும் என அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். மேலும் இந்த படம் ஒடிசாவில் நடைபெற்ற சம்பவத்தை பிரதிபலிக்கும் காட்சியாக காணப்படுவதாகவும் தெரிவித்துள்ளார் இந்த பாராட்டு, படத்திற்கான எதிர்பார்ப்பை மேலும் உயர்த்தியுள்ளது.

வெறும் ஆக்சன் திரைப்படமாக மட்டுமல்லாமல், சமூகப் பின்னணியையும் உணர்ச்சியையும் இணைக்கும் முயற்சியாக ‘கர’ உருவாகியிருப்பதால், இது ரசிகர்களிடையே எவ்வாறு வரவேற்பைப் பெறும் என்பது ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

Advertisement