நடிகை சமந்தா ரூத் பிரபு நடித்துள்ள புதிய திரைப்படமான ‘எங்கள் தங்கம்’ (தெலுங்கில் ‘மா இண்டி பங்காரம்’) கடந்த ஜூன் 19-ஆம் தேதி உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியானது. பெண் இயக்குநர் நந்தினி ரெட்டி இயக்கியுள்ள இந்த ஆக்ஷன் டிராமா திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.
இந்த படத்தில் சமந்தாவுடன் கௌதமி, ஸ்ரீமுகி, குல்ஷன் தேவ்வையா மற்றும் திகாந்த் மஞ்சாலே ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். குடும்ப பின்னணியுடன் கூடிய அதிரடி கதைக்களத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படம், உணர்ச்சி மற்றும் ஆக்ஷன் காட்சிகளின் கலவையாக ரசிகர்களை கவர்ந்துள்ளது.

மேலும், ‘Tralala Moving Pictures’ நிறுவனம் சார்பில் சமந்தாவும், அவரது கணவரும் பிரபல பாலிவுட் இயக்குநருமான ராஜ் நிடிமோறுவும் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளனர். குறிப்பாக சமந்தா நடித்துள்ள அதிரடி காட்சிகள் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்று சமூக வலைத்தளங்களிலும் பேசுபொருளாக மாறியுள்ளன.
இந்நிலையில், படம் வெளியான முதல் 4 நாட்களிலேயே உலகளவில் ரூ.46.04 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் மூலம் சமந்தாவின் திரைப்பயணத்தில் மேலும் ஒரு வெற்றிப்படமாக ‘எங்கள் தங்கம்’ உருவெடுத்துள்ளதாக ரசிகர்கள் மகிழ்ச்சி தெரிவித்து வருகின்றனர். வசூல் வேகம் தொடர்ந்தால், வரும் நாட்களில் படம் இன்னும் பெரிய சாதனையை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Listen News!