தென்னிந்திய சினிமாவில் தனது தனித்துவமான நடிப்பால் பிரபலமானவர் நடிகை அமலா பால். தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல்வேறு மொழிப் படங்களில் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ள இவர், கடந்த ஆண்டுகளில் திரைத்துறையில் மட்டுமல்லாமல் தனது தனிப்பட்ட வாழ்க்கையிலும் முக்கியமான மாற்றங்களை சந்தித்துள்ளார்.
அந்த வகையில், 2023ம் ஆண்டு ஜகத் தேசாய் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்ட அமலா பால், தற்பொழுது வாழ்க்கையில் புதிய பரிணாமத்தை அடைந்துள்ளார். இந்த நிலையில், அவர் சமீபத்தில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்ட அழகிய புகைப்படங்கள், இணையத்தில் வைரலாகி வருகின்றது.
அமலா பால் பகிர்ந்த புகைப்படங்கள் குறித்து ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் பல கருத்துக்களைத் தெரிவித்துள்ளனர். இதிலிருந்து ரசிகர்கள் அமலா பாலை தொடர்ந்து நேசித்து வருகிறார்கள் என்பதும், அவர் ஒரு நடிகையாக நம்பிக்கையுடன் வாழ்வதை பாராட்டுகிறார்கள் என்பதும் தெளிவாகிறது.
Listen News!