• May 01 2026

இதோ வந்துவிட்டான் பிரவுன் மணி! - தயாரிப்பாளராக ரியோ ராஜ் எடுத்த அதிரடி ரிஸ்க் பலிக்குமா?

shali / 1 hour ago

Advertisement

Listen News!

2019ஆம் ஆண்டு வெளியான 'நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா' படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமான ரியோ ராஜ், தொடர்ந்து தமிழ் சினிமாவில் தனது தனித்துவமான நடிப்பால் கவனம் பெற்று வருகிறார். பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்துவரும் அவர், தற்போது புதிய முயற்சியாக தயாரிப்பாளராகவும் களமிறங்கியுள்ளார்.


அதன்படி, ‘River Root Studios’ என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ள ரியோ ராஜ், அதன் முதல் படத்தை தயாரிக்க உள்ளார். இந்த புதிய படத்தை அறிமுக இயக்குநர் கதிரவன் சம்பத் எழுதி இயக்குகிறார். இப்படத்தில் ராம் நிஷாந்த் மற்றும் JS கவி முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கவுள்ளனர்.

இந்நிலையில், இப்படத்தின் தலைப்பு சமீபத்தில் வெளியிடப்பட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. “பிரவுன் மணி” என்ற இந்த தலைப்பு, தனித்துவமான பெயரால் ஆர்வத்தை கிளப்பியுள்ளது. இதற்கான புரோமோ வீடியோவையும் படக்குழு வெளியிட்டுள்ளது.

இந்த புரோமோ சமூக வலைத்தளங்களில் வேகமாக வைரலாகி வருகிறது. இதில் புதிய கதைக்களம் மற்றும் வித்தியாசமான அணுகுமுறை இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர். தயாரிப்பாளராக ரியோ ராஜ் எடுத்துள்ள இந்த புதிய முயற்சி, அவரின் சினிமா பயணத்தில் முக்கியமான கட்டமாக பார்க்கப்படுகிறது.

Advertisement

Advertisement