• May 01 2026

எத்தனையோ Relationshipல இருந்தாலும் ஒரு பைசா கூட யாருகிட்டயும் வாங்கவில்லை...வனிதா ஓபன்டாக்

shali / 2 hours ago

Advertisement

Listen News!

நடிகை வனிதா விஜயகுமார் சமீபத்தில் பகிர்ந்துள்ள கருத்துக்கள் சமூக வலைத்தளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. தனது வாழ்க்கை அனுபவங்களை வெளிப்படையாக பகிர்ந்த அவர், “நான் பல relationship-களில் இருந்திருக்கிறேன். ஆனால் யாரிடமும் பணம் கேட்டதில்லை. 22 ஆண்டுகளாக நான் என் சொந்த முயற்சியால் நின்று கொண்டு இருக்கிறேன் என்பதில் பெருமை கொள்கிறேன்” என்று தெரிவித்தார்.


மேலும், ஒரு உறவில் மனநிறைவு இல்லையெனில் அதைத் தொடர்வதற்குப் பதிலாக நேர்மையாக விலகுவது தான் சரியான முடிவு என்றும் அவர் வலியுறுத்தினார். “பிடிக்கவில்லை என்றால் விலகி விடுவது தவறு அல்ல. சமூகம் என்ன சொல்வது, அயல்வாசிகள் என்ன நினைப்பார்கள் என்பதைக் குறித்து கவலைப்பட தேவையில்லை” என்ற அவரது கருத்து பலரிடம் ஆதரவைப் பெற்றுள்ளது.

அதோடு, குடும்ப உறுப்பினர்கள் கூட எதிராக இருந்தாலும், ஒருவரின் மன அமைதியே முக்கியம் என்பதையும் அவர் குறிப்பிட்டார். “உங்களுக்கே உங்களால் செய்யப்படும் நீதி தான் முக்கியம்” என்ற அவரது வாக்கியம் ரசிகர்களிடையே பரவலாக பகிரப்படுகிறது.

இந்த கருத்துக்கள் பலருக்கு தன்னம்பிக்கை அளிப்பதாக இருந்தாலும், சிலர் இது குறித்து வேறுபட்ட கருத்துகளையும் வெளியிட்டு வருகின்றனர். இருப்பினும், தனது வாழ்க்கையை தன்னம்பிக்கையுடன் நடத்த வேண்டும் என்ற வனிதாவின் செய்தி பலருக்கும் சிந்தனையை ஏற்படுத்தியுள்ளது.


Advertisement

Advertisement