தமிழ் சினிமாவில் குக் வித் கோமாளி மூலம் பிரபலமடைந்த சமையல் கலைஞர் மாதம்பட்டி ரங்கராஜ் தற்போது பெரிய சர்ச்சையில் சிக்கியுள்ளார். இவரது இரண்டாவது திருமணமும், அதனையடுத்து வந்த கர்ப்பம் தொடர்பான விவாதமும், திரைத்துறையில் மட்டுமல்லாமல் சமூக வலைத்தளங்களிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மாதம்பட்டி ரங்கராஜ், பல ஆண்டுகளாக ஸ்ருதி என்பவருடன் திருமண வாழ்கையை பகிர்ந்து வந்தவர். இவர்களுக்கு இரண்டு பிள்ளைகளும் உள்ளனர். ஆனால், சமீபத்தில் ஆடை வடிவமைப்பாளரான ஜாய் கிரிசில்டா என்பவருடன் இரண்டாவது திருமணம் செய்ததாக இணையத்தில் புகைப்படங்கள், வீடியோக்கள் பரவ ஆரம்பித்தன.
இரண்டாவது திருமணம் நடந்தது போல் வெளியான புகைப்படங்கள், சமூக வலைத்தளங்களில் தீவிர கவனத்தை பெற்றன. பின், ஜாய் கிரிசில்டா ஒரு அதிர்ச்சி தகவலை வெளியிட்டார்.
திருமணத்திற்குப் பிறகு, ஜாய் கிரிசில்டா தனது சமூக ஊடகங்களில், “நான் 7 மாதம் கர்ப்பமாக இருக்கிறேன். எனது கருவில் இருக்கும் குழந்தைக்கு மாதம்பட்டி ரங்கராஜ் தான் தந்தை” என அறிவித்தார். இந்த தகவல் பரவியதும், மக்கள் மத்தியில் ஆச்சரியமும் கோபமும் உருவானது.
இதனையடுத்து, கிரிசில்டா தற்பொழுது மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை ஏமாற்றிவிட்டதாக புகார் ஒன்றைக் கொடுத்துள்ளார். இதைத் தொடர்ந்து பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தி, உணர்ச்சிபூர்வமாக தனது நிலையை வெளிப்படுத்தினார் கிரிசில்டா.
அதன் போது அவர், “மாதம்பட்டி ரங்கராஜ் என் கணவர் தான். அவர், தனது முதல் மனைவியை விட்டுப் பிரிந்து தனியாக வாழ்கிறேன் என்று சொல்லிய பின் தான் அவருடன் வாழ ஒப்புக்கொண்டேன். 7 மாத கர்ப்பமாக இருக்கிறேன். என்னுடைய குழந்தைக்கு அவர் தான் அப்பா.ஒன்றரை மாதங்களுக்கு முன் அவர் திடீர் என்று என்னை விட்டுப் பிரிந்து விட்டார். அவரும் நானும் ஒன்றாக வாழ வேண்டும் அதைத் தான் கோரிக்கையாக வைத்துள்ளேன்..." என்று கூறியுள்ளார்.
இந்த விவகாரம் வெளியாகிய பின்பு, சமூக வலைத்தளங்களில் மக்கள் தங்களது ஆதங்கத்தை பதிவு செய்து வருகின்றனர்.
Listen News!