• Aug 28 2025

நிவேதா பெத்துராஜின் காதலன் யாரு தெரியுமா.? தீயாய் பரவும் போட்டோஸ்

Aathira / 4 hours ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் வெளியான ஒரு நாள் கூத்து படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர்தான் நிவேதா பெத்துராஜ்.  அதன் பின்பு உதயநிதி ஸ்டாலின் உடன் இணைந்து என் மனசு தங்கம்,  ரவி மோகனுடன் டிக் டிக் டிக், விஜய் ஆண்டனியுடன் திமிரு புடிச்சவன்,  பிரபு தேவாவுடன் பொன் மாணிக்கவேல் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

தெலுங்கிலும் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான அலா வைகுந்தபுரமுலோ படத்தில்  நடித்துள்ளதோடு  டோலிவுட்டிலும்  பல படங்களில் நடித்துள்ளார். இவருடைய நடிப்பில் இறுதியாக வெளியான பவர் வெப் சீரிஸ்க்கு பிறகு எந்த ஒரு படங்களிலும் கமிட்டாகவில்லை என கூறப்படுகிறது. 

சினிமாவில் மட்டுமில்லாமல் கார் ரேஸ்சிங்கிலும் தனது கவனத்தை செலுத்தி வருகின்றார் நிவேதா பெத்துராஜ்.  1991 ஆம் ஆண்டு பிறந்த நிவேதா பெத்துராஜுக்கு தற்போது 34 வயதாகிறது. 


இந்த நிலையில்,  நிவேதா பெத்துராஜ் தனது காதலரை அறிமுகப்படுத்தியுள்ளார்.  துபாயில் தொழிலதிபராக  இருக்கும் ரஜித் இப்ரான் என்பவரையே  காதலித்து திருமணம் செய்ய உள்ளாராம்.  அதுவும் இந்த ஆண்டு இறுதிக்கு உள்ளையே இவர்களுடைய திருமணம் நடைபெற போவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

மதுரையில் பிறந்து வளர்ந்த நிவேதா தற்போது கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பே துபாயில் செட்டில் ஆகிவிட்டார்.  இதன் போதே இவர்களுக்குள்ளே காதல் மலர்ந்துள்ளது என நம்பப்படுகின்றது. 

Advertisement

Advertisement