சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோட்டில், க்ரிஷ் தன்னை உன்னுடனே அழைத்துச் செல்லுமாறு ரோகிணியுடன் அடம் பிடிக்கின்றார். இதனால் ரோகிணி அவருக்கு அடிக்கச் செல்கின்றார். எனினும் மகேஷ் அவர்கள் இருவரையும் சமாதானப்படுத்தி உன்னால் உன்னுடைய அம்மா அழுகின்றார் இது உனக்கு பிடிக்குமா? என்று க்ரிஷை சமாதானப்படுத்தி அனுப்புகின்றனர்.
முத்து, மீனாவிடம் அருண் ரவுடிகளுடன் சிக்கிய சம்பவத்தையும் தான் போய் காப்பாற்றியதையும் சொல்லுகின்றார். மேலும் அருண் இன்னும் தன்னை எதிரியாக பார்ப்பதாகவும் எல்லாரும் ஒன்றாக இருந்தால் நன்றாக இருக்கும் என்றும் உணர்ச்சி பூர்வமாக பேசுகின்றார்.
இன்னொரு பக்கம் அருண் சீதாவிடம் முத்துதான் தன்னை ஆள் வைத்து அடித்ததாக சொல்கின்றார். சீதா நம்ப மறுக்கும் போதும் அவர் நம்பும் படியாக எடுத்துச் சொல்லுகின்றார். இதனால் சீதாவும் குழப்பம் அடைகின்றார். அதன் பின்பு மீனாவுக்கு போன் பண்ணி உன்னை தனியாக சந்திக்க வேண்டும் என்று சொல்லுகின்றார். இதனை அருண் பின்னால் இருந்து கேட்டு மகிழுகின்றார்.
இதைத் தொடர்ந்து மனோஜின் ஷோரூமுக்கு வந்த அவருடைய நண்பர், உன்னால் சீப் கெஸ்ட் ஆக கலந்து கொள்ள முடியவில்லை. ஆனால் நான் தான் அதில் கலந்து கொண்டேன் என்று அங்கு எடுத்த புகைப்படங்களை காட்டுகின்றார்.
மனோஜ் அதனை வாங்கி பார்த்துக் கொண்டிருக்கும்போது அதில் க்ரிஷ் இருப்பான் என்று உடனே அந்த புகைப்படங்களை வாங்கி எடுக்கிறார் ரோகிணி. அதன்படியே அதில் க்ரிஷ் இருக்கின்றார். எனவே அந்த போட்டோவை எடுத்து யாருக்கும் தெரியாமல் கிழித்து விடுகின்றார் ரோகிணி. இதுதான் இன்றைய எபிசோட்.
Listen News!