• Aug 28 2025

அவன் ஹீரோவா? என் படத்த தட்டிப் பறிச்சுட்டான்.! சர்ச்சையை கிளப்பிய மன்சூர் அலிகான்

Aathira / 3 hours ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில்  கமர்ஷியல், ஆக்சன், காதல் மற்றும் வரலாற்று கதை அம்சங்கள் கொண்ட திரைப்படங்களில் நடித்து தனக்கென மிகப் பெரிய ரசிகர்களை உருவாக்கிய நடிகர் தான் கார்த்தி.  இவருடைய நடிப்பில் இறுதியாக மெய்யழகன் படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. 

இதைத்தொடர்ந்து நலன் குமாரசாமி இயக்கத்தில் வா வாத்தியார் படத்திலும்,  பி.எஸ் மித்ரன் இயக்கத்தில் சர்தார் 2 படத்திலும் நடித்து வருகின்றார் கார்த்தி.  மேலும் டாணாக்காரன் பட இயக்குநர்  இயக்கத்தில் புதிய படம் ஒன்றிலும் நடிக்க உள்ளார் என்ற தகவலும் வெளியாகி இருந்தது. 

இந்த நிலையில்  நடிகர் கார்த்தி பற்றி  பிரபல நடிகர் மஞ்சூர் அலிகான்  வெளியிட்ட கருத்து தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 


அதில் அவர் கூறுகையில்,  கைதி படம் லோகேஷ் கனகராஜ் எனக்காக எழுதிய கதை. இதை கார்த்திக் கிட்டையும் சொல்லி இருக்காரு.. அப்போ கார்த்தி என்ன சொல்லி இருக்கணும் பாவம் அவர் வாய்ப்பு இல்லாமல் இருக்கார்..  இந்தப் படம் அவருக்கு டெர்னிங் பாயிண்டா  இருக்கட்டும்.. அவரை வச்சு படத்தை எடுங்க என்று சொல்லி இருக்கணும்.. அப்பதான் அவன் ஹீரோ.. நல்ல கதை என்று வாங்கி போட்டுக்கிட்டா.. எப்படி..? எல்லோரும் இங்கே வாழனும்ல.. என்று தெரிவித்துள்ளார். 


அதாவது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடித்த கைதி திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது.  இதன் இரண்டாவது பாகம் தற்போது ரிலீஸுக்கு ரெடியாகி வருகின்றது. 

இவ்வாறான நிலையிலேயே கைதி திரைப்படத்தை தனக்காக  லோகேஷ் கனகராஜ்  எழுதினார் என்றும் அதனை கார்த்தி தட்டி பறித்து விட்டார் என்றும் தெரிவித்துள்ளார் அலிகான்.

Advertisement

Advertisement