• Jun 24 2026

விஜய்யின் உண்மையான முகம் இதுதானா? ரசிகர்களை அலறவிட்ட விவேக்கின் பதிவு

shali / 1 hour ago

Advertisement

Listen News!

முதலமைச்சரும் நடிகருமான விஜய் அவர்களை திரைப்பட பாடலாசிரியர் விவேக் நேரில் சந்தித்த சம்பவம் ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றுள்ளது. இந்த சந்திப்பின் போது, விவேக் எழுதிய பிரபலமான “ஆளப்போறான் தமிழன்” பாடலின் வரிகள் இடம்பெற்ற சிறப்பு புகைப்பட பிரேமை விஜய்க்கு பரிசாக வழங்கினார். இந்த நினைவுப்பரிசு விஜயின் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.


இந்த சந்திப்பின் புகைப்படங்களை தனது எக்ஸ் தளப்பக்கத்தில் பகிர்ந்த விவேக், விஜயைப் பற்றிய நெகிழ்ச்சியான பதிவையும் வெளியிட்டார். அதில், “மனம் திறந்து பாராட்டுவதிலும், அளவற்ற அன்பை வழங்குவதிலும் அவரே முதன்மையானவர்” என்று விஜயின் மனிதநேய பண்புகளைப் புகழ்ந்தார். 

மேலும், திரையுலகில் விஜய் அடைந்துள்ள உயரமும் வெற்றியும் தற்செயலாக கிடைத்தவை அல்ல என்றும், அவரது பல ஆண்டுகால கடின உழைப்பு, அர்ப்பணிப்பு மற்றும் விடாமுயற்சிக்குக் கிடைத்த அங்கீகாரம் என்றும் குறிப்பிட்டார்.

விஜயுடன் பணியாற்றிய அனுபவங்களை நினைவுகூர்ந்த விவேக், அவரின் எளிமை மற்றும் பிறரை மதிக்கும் குணம் தான் அவரை ரசிகர்களின் மனதில் தனித்துவமாக நிலைநிறுத்தியுள்ளது என்று பாராட்டினார். இந்த பதிவு சமூக வலைதளங்களில் வேகமாக பரவி, விஜய் ரசிகர்களால் பெரிதும் பகிரப்பட்டு வருகிறது. விவேக்கின் வார்த்தைகள், விஜயின் மீதான அவரது மரியாதை மற்றும் பாசத்தை வெளிப்படுத்துவதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.


Advertisement

Advertisement