• Jun 24 2026

லோகேஷ் கனகராஜின் புதியமுயற்சி கைகொடுக்குமா? ‘DC' பட அப்டேட்டால் குஷியில் ரசிகர்கள்

shali / 1 hour ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் இயக்குநராக தனக்கென தனி முத்திரையை பதித்துள்ள லோகேஷ் கனகராஜ், தற்போது முதன்முறையாக கதாநாயகனாக அறிமுகமாகும் திரைப்படம் தான் ‘DC’. இந்த திரைப்படம் குறித்த புதிய தகவல் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

படக்குழுவினர் திட்டமிட்டபடி அனைத்துப் பணிகளும் நிறைவடைந்தால், திரைப்படம் வரும் ஜூலை 31ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.


அதிரடி மற்றும் காதல் கலந்த திரைப்படமாக உருவாகியுள்ள ‘DC’ படத்தை அருண் மாதேஸ்வரன் இயக்கியுள்ளார். வித்தியாசமான கதைக்களங்களையும் கையாள்வதில் பெயர் பெற்ற அருண் மாதேஸ்வரன், இந்த படத்திலும் புதுமையான அணுகுமுறையை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. 

கதாநாயகியாக பாலிவுட் நடிகை வாமிகா கபி நடித்துள்ளார். லோகேஷ் கனகராஜ் மற்றும் வாமிகா கபி இணையும் முதல் படம் என்பதால் ரசிகர்கள் மத்தியில் ஆர்வம் அதிகரித்துள்ளது.

இயக்குநராக பல வெற்றிப் படங்களை வழங்கிய லோகேஷ் கனகராஜ், நடிகராக எந்த வகையான நடிப்பை வெளிப்படுத்தப் போகிறார் என்ற கேள்வி ரசிகர்களிடையே எழுந்துள்ளது.

Advertisement

Advertisement